Onetamil News Logo

 மீன் பிடி தடைக்காலம் முடிந்தது ; மீனவர்கள் வரும் சனிக்கிழமை 15ம் தேதி கடலுக்கு செல்கின்றனர்.

Onetamil News
 

 மீன் பிடி தடைக்காலம் முடிந்தது ; மீனவர்கள் வரும் சனிக்கிழமை 15ம் தேதி கடலுக்கு செல்கின்றனர்.


தூத்துக்குடி 2019 ஜூன் 13 ; திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15–ந் தேதி முதல் ஜூன் மாதம் 14–ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 
தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டது.  அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.                                                                                                                                                             இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்வது தடை செய்யப்பட்டது. அதேநேரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச்செல்ல அனுமதிக்கப்பட்டன. தடைக் காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 412 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் 67 விசைப்படகுகள் 24 மீட்டர் நீளத்துக்கு அதிகமாக உள்ளன. இந்த படகு உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளனர். அந்த படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.                                                             
                                                                                                                                                    இதனால் தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தப்பட்டன. படகுகள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் உட்பட மீன்பிடி தொழில் சார்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில் இழந்தனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் அண்டை மாநிலங்களுக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால், மீன்வரத்து குறைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மீன் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால், மீன், கருவாடு விலையும் பலமடங்கு உயர்ந்தது. கரை நிறுத்தப்பட்ட விசைப்படகுகளை பழுது நீக்கி சீரமைக்கும் பணியில் படகு உரிமையாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  இதனால் மீனவர்கள் மீன்பிடித்தலுக்கு செல்லும் வகையில் தங்கள் படகுகளில் உள்ள சிறு, சிறு பழுதுகளை நீக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அந்த பணிகள் முடிக்கப்பட்டு நேற்று முதல் வெள்ளோட்டம் பார்த்தனர். அதே போன்று வலைகளில் ஏற்பட்ட சேதங்களையும் சரி செய்தனர். இந்த வலை மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை மீனவர்கள் நேற்று முதல் விசைப்படகுகளில் ஏற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சனிக்கிழமை  (15–ந் தேதி) முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.            
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo