Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி இன்று 11ம் தேதி தொடங்கியது.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி இன்று 11ம் தேதி தொடங்கியது.    


 தூத்துக்குடி 2019 ஜூன் 11 ;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி இன்று (11.06.2019) தொடங்கியது.
விளாத்திகுளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,  தலைமையில் 1428ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இன்று புதூர் உள்வட்டத்தை சேர்ந்த முத்துசாமிபுரம், கவுன்டன்பட்டி, சிவலார்பட்டி, வன்னிபட்டி, மெட்டில்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, குமாரசித்தன்பட்டி, மணியக்காரன்பட்டி, சென்னம்பட்டி, வெளவால்தொத்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த வருவாய் கணக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட  அலுவலர்களிடம் வழங்கி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
முன்னதாக வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி தொடங்கி வைக்கும்முகமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்று நடவு செய்தார். மேலும் நில அளவை கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, துணை ஆட்சியர் (பயிற்சி) முத்துமாதவன், இணை இயக்குநர் (வேளாண்மை) மகாதேவன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், தலைமையிடத்து வட்டாட்சியர் நிஷாந்தினி, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, அரவிந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo