Onetamil News Logo

கனிமொழியின் செல்போன்களை வாங்கி ‘சுவிட்ச்-ஆப்‘ செய்து வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை ;திமுக.வினர் போராட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் கனிமொழியின் செல்போன்களை வாங்கி ‘சுவிட்ச்-ஆப்‘ செய்து வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை ;திமுக.வினர் போராட்டம் 



        

தூத்துக்குடி 2019 ஏப்ரல் 16 ;தூத்துக்குடி குறிஞ்சிநகரில்  உள்ள கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் நள்ளிரவு திடீர் சோதனை நடந்தது. இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.
17 வது நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த வீட்டின் அருகில் உள்ள வீடு அலுவலகமாக  செயல்பட்டு வருகிறது.
                                                                                                                                                                                                         
    இந்த நிலையில்  கோவில்பட்டியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டார். அவருடன் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலையில் கோவில்பட்டி நகரில் முக்கிய வீதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை அங்கு நிறைவு செய்தார்.
அதன் பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர் கட்சி நிர்வாகிகள் சிலருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணியளவில் 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென கனிமொழி வீட்டுக்கு வந்தனர்.
தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்துள்ளோம் என்றும் கூறிவிட்டு, வீட்டின் கதவையும், ஜன்னல் கதவுகளையும் மூடினர். கனிமொழியின் செல்போன்களை வாங்கி ‘சுவிட்ச்-ஆப்‘ செய்தனர். பின்னர் அவர்கள் பிரிந்து சென்று வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு அறையிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கனிமொழி வீட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பின், கீதாஜீவனை மட்டும் போலீசார் வீட்டுக்குள் அனுமதித்தனர்.இதையடுத்து அங்கு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், வருமான வரித்துறையினரின் சோதனை இரவு வரை நீடித்தது.மேலும், நேரம் செல்ல, செல்ல தி.மு.க. தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து வருவதால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, கனிமொழி வீட்டின் முன்பு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-கனிமொழி வீட்டில் அனைத்து அறைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கனிமொழிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து இங்கு தேர்தலை ரத்து செய்வதற்காக எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ஆனாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.,இவ்வாறு அவர் கூறினார்.
 கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது...என்னை பயமுறுத்திப்பார்க்கவும் மிரட்டி பார்க்கவும் எதிர் கட்சிகளின் சதி வலை ,நடந்துள்ளது.திமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்று அவர்களுக்குத்  தெரியாது என்று நினைக்கிறேன்.வேலூரில் நடந்தது போல் இங்கும் நடந்து விடும் என்று தப்பு கணக்கு போட்டுள்ளனர்.
ஒரு மணி நேரமாக வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் தவறான தகவலால் சோதனை நடத்தியதாக அவர்களே ஒப்புக்கொண்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் உள்ளது, அதை சோதனையிட தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சோதனை எங்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த முயற்சி இது. ஆதாரம் இல்லாமல் இந்த சோதனையை நடத்தி உள்ளனர். இதை கண்டு தி.மு.க. சளைக்காது. ஏற்கனவே எங்களது கட்சி மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 2 முறை சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளை குறி வைத்து வேண்டுமென்றே இதுபோன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயல்படுகின்றனர். இதை நாங்கள் சந்திப்போம். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் மத்திய அரசுடன் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
                                                                                                                                            தொடர்ந்து கனிமொழி, தொண்டர்கள் மத்தியில் பேசியாராவது...  “நம்மை மிரட்டுவதற்காக இந்த சோதனையை நடத்தி உள்ளனர். அவர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும், நாம் மேன்மக்களாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரும் அமைதியாக கலைந்து வீட்டுக்கு செல்லுங்கள். ஆதரவு தந்ததற்கு நன்றி“ என்று கூறினார்.    
        சம்பவ இடத்திற்கு மாநில இளைஞர் அணி துனைச் செயலாளர் வக்கீல் ஜோயல்,சரத் பாலா, பாலகுருசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரதீப் கஸ்பார்,ஆதி திராவிடர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம்,இந்திய மனித உரிமை கட்சித் தலைவர் ஜேசுதாஸ் ,மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கிங் பாலா ,ஆதி திராவிடர் மாவட்ட துணை அமைப்பாளர் பெருமாள்,வட்ட பிரதிநிதி செம்புலிங்கம், கோட்டுராஜா, உட்பட 1000 க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டு வந்தனர்.

 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo