Onetamil News Logo

இந்திய குடியரசு கட்சி தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் ;மாநில தலைவர் பாதர் எம்.ஏ.சூசையார் வேண்டுகோள்

Onetamil News
 

இந்திய குடியரசு கட்சி தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் ;மாநில தலைவர் பாதர் எம்.ஏ.சூசையார் வேண்டுகோள்


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 25 ;இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் பாதர் எம்.ஏ. சூசையார் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம், தூத்துக்குடியில்  தேசியத் தலைவர் ராம்தாஸ் அத்வாலே தலைமையில் ஏப்ரல் 23 மாநாடு நடத்துவது பற்றி விளக்க கூட்டம் பிரையண்ட் நகர் பத்திரகாளியம்மாள் திருமணமண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாவட்ட மகளிர் அணித் தலைவி எஸ். பானுமதி வரவேற்றார். மாநில செயலாளர் இனியவன் எஸ்.ஜே. கென்னடி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பாதர் எம்.ஏ. சூசையார் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றி பேசியவதாவது. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய தலைவர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தல் அதிகளவில் 3 இலட்சம் உறுப்பினர்களையும், தமிழகத்தல் 1கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்காக அரசு திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கிடைக்க பாடுபடுவோம். இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொழில் வளர்ச்சிக்காக அரசு துறையின் மூலம் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வோம். சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் தொழில் உற்பத்தி செய்வோருக்கு துணிகர மூலதனம் நிதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) அடிதட்டு, நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காகவும், இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும் இந்திய குடியரச கட்சி (அத்வாலே) என்றும் உறுதுணையாக இருக்கும் என மாநில தலைவர் பாதர் எம்.ஏ. சூசையார் கூறினார். முன்னதாக மாநில செயலாளர் இனியவன் எஸ்.ஜே.கென்னடி தலைமையில் ஆள்உயர மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே 10 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தையும் அதற்கான சந்தா தொகையை காசோலையாகவும், நினைவு பரிசினையும் மாநில செயலாளர் எஸ்.ஜே.கென்னடி மாநில தலைவர் பாதர்.எம்ஏ. சூசையாரிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தமிழகத்திற்கான இணைய தளம் மற்றும் சமூக வலைதள சேவைகளை தொடங்கி வைத்தார். விழாவில் உறுப்பினர்களுக்கு தினசரி நாட்காட்டியையும், கட்சி மப்லர், பேட்ச், டிசர்ட், தொப்பி ஆகியவை வழங்கப்பட்டது.
மாநில தலைவர் பாதர். எம்.ஏ. சூசையார் மாநில செயலாளர் எஸ்.ஜே.கென்னடிக்கு, கட்சியில் மாநில செயலாளருக்கான பொறுப்பிற்கான நியமண சான்றிதழையும், அடையாள அட்டையையும் வழங்கினார். இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் அணீஸ் கனகராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் புஷ்பகலா, மாவட்ட மாணவர் அணி தலைவர் ஜே.எஸ். யுவன்குமார், தெற்கு மாவட்ட தலைவர் ஆத்தூர் எஸ். முத்துக்குமார், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் என். மாரிதங்கம், மாவட்ட தலைவர் (வடக்கு) சுதாகர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத் தலைவர் எஸ். குமார் நன்றி கூறினார், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில செயலாளர் இனியவன் எஸ்.ஜே.கென்னடி சிறப்பாக செய்திருந்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo