Onetamil News Logo

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன. - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

Onetamil News
 

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன - தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 18 ; தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன - என்று  தூத்துக்குடியில் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு விழா ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது....
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை மறுபடியும், மறுபடியும் சரி செய்வதற்கான முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் எந்த பலனும் இல்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வருவது தான். இந்த ஆட்சியில் தப்பித்தவறி ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் சொன்னாலும் அவர்களது அமைச்சர்கள் எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சொல்லும் மோசமான நிலையில் உள்ளது. ஆகவே இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் வருவது தான் என்றார்.பேட்டியின் போது அவருடன் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் N.P. ஜெகன், மாநகர் தி மு க செயலாளர் ஆனந்தசேகரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo