Onetamil News Logo

தூத்துக்குடிமாவட்டத்தில் திருமணமண்டபம் உரிமையாளர்கள் / நகைஅடகுபிடிப்பேர் / வட்டிதொழில் செய்வோர் /அச்சகஉரிமையாளர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனைக்கூட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடிமாவட்டத்தில் திருமணமண்டபம் உரிமையாளர்கள் / நகைஅடகுபிடிப்பேர் / வட்டிதொழில் செய்வோர் /அச்சகஉரிமையாளர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனைக்கூட்டம் 


தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடிமாவட்டத்தில் திருமணமண்டபம் உரிமையாளர்கள் / நகைஅடகுபிடிப்பேர் / வட்டிதொழில் செய்வோர் /அச்சகஉரிமையாளர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடிமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திருமணமண்டபம் உரிமையாளர்கள்/நகைஅடகுபிடிப்பேர் /வட்டிதொழில் செய்வோர் /அச்சகஉரிமையாளர்கள் ஆகியோர்களுடன்; ஆலோசனைக்கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,  தலைமையில்நடைபெற்றது. 
கூட்டத்தில்,மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர்  பேசியதாவது:-
இந்தியதேர்தல் ஆணையம் தேர்தலைஅறிவித்ததையொட்டி,தேர்தல் நன்னடத்தைவிதிமுறைகள் உடனடியாகஅமலில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து,திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரின் கூட்டம் நடைபெறும் பட்சத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவிதேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றபின்னரே திருமணமண்டப உரிமையாளர்கள் தங்களுடைய மண்டபத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவேண்டும்.அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினரின் அனுமதி மட்டும் பெற்று திருமணமண்டப உரிமையாளர்கள் அனுமதி அளிக்கக்கூடாது. திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபத்தில் கூட்டம் நடைபெறுவது தொடர்பாகதேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவிதேர்தல் நடத்தும்  அலுவலரிடம் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.அரசியல் தொடர்பானஅனைத்து நிகழ்ச்சிகளும் கண்காணிப்பு அலுவலர்களால் முழுமையாக வீடியோ கவரேஜ் செய்யப்பட்டுஅத்துணை செலவுகளும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க நடவடிக்கைஎடுக்கப்படும். 1950 மற்றும் ; C Vigil App மூலமும் பெறப்படும் புகார்களின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமணமண்டபமுன்பதிவுதொடர்பானபதிவேடுகளைமுழுமையாகபராமரிக்கவேண்டும். திருமணமண்டபமுன்பதிவிற்குமுன்னரேஅரசியல் கட்சிநிகழ்ச்சிநடத்துபவர்கள் உரியஅனுமதியைபெற்றுமண்டபஉரிமையாளர்களிடம் வழங்கிமுன்பதிவுசெய்யவேண்டும். இதுதொடர்பானஅனுமதிகள் தேர்தல் ஆணையத்தினசுவேதா அப் மூலம் இணையதளத்தில் எந்தநேரமும் பதிவுசெய்யலாம். இணையதளம் மூலமாகவேஉரியஅனுமதிவழங்கப்படும். 
தேர்தல் நடத்தைவிதிமுறைகளின்படிரூ.50,000க்கு மேல் ரொக்கமாககொண்டுசெல்லஅனுமதி இல்லை. பணம் எடுத்துசெல்பவர்கள் அதற்கானஆவணங்களைஉடன் கொண்டுசெல்லவேண்டும். ரூ.10,000க்குமேல் மதிப்புள்ளபரிசுபொருட்கள்,மதுபானங்கள் வைத்திருப்போர் மீதுகடும் நடவடிக்கைஎடுக்கப்படும். ரூ.10 இலட்சத்திற்குமேல் எடுத்துசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமானவரித்துறைஅலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். மேற்கண்டபலவிதிமுறைகள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே,நகைஅடகுபிடிப்போர் / வட்டிதொழில் செய்வோர் ஆகியோர் தங்கள் கணக்குகளைமுறையானஆவணங்களுடன் பராமரிக்கவேண்டும். மேலும்,ரூ.1 இலட்சத்திற்குமேல் பணம் பெறுபவர்கள் விவரங்களைதேர்தல் நடத்தும் அலுவலர் அல்லதுஉதவிதேர்தல் நடத்தும் அலுவலருக்குதெரிவிக்கவேண்டும். மேலும்,தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லதுஉதவிதேர்தல் நடத்தும்அலுவலர் /தேர்தல் செலவு குழு ஆகியோர்விபரங்களைகோரும் சமயத்தில் கணக்குகளைசமர்ப்பிக்கவேண்டும்.தேர்தல் விதிமுறைகள் நடைமுறைகள் உள்ளதால்வழக்கமானதைவிட கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். 
அச்சகஉரிமையாளர்கள் தேர்தல் தொடர்பானவிளம்பரங்களைஅச்சிடும்போது,யாரிடமிருந்துஅச்சிடும் பணிபெறப்பட்டதோஅவர்களின் விவரங்களைபெற்றுமுறையாகபதிவேடுகள் பராமரிக்கவேண்டும்.  மேலும்,அச்சகஉரிமையாளர்கள் விளம்பரங்கள் செய்யும் அரசியல் கட்சியினரிடம் இருந்துஉரியமுறையில் எழுத்துபூர்வமாகஉறுதிமொழியைபெறவேண்டும். அதற்கு 2 நபர்கள் சாட்சியம் பெறவேண்டும். மேலும்,விளம்பரபதாகைகளில் அச்சகம் பெயர் முகவரியுடன் குறிப்பிட்டிருக்கவேண்டும்.போஸ்டர்கள் அச்சடித்ததுஎண்ணிக்கைமற்றும் கட்டணம் மற்றும் உறுதிமொழிகடிதம் விபரங்களுடன் 4 தினங்களுக்குள் அனைத்துவிவரங்களையும்தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லதுஉதவிதேர்தல் நடத்தும்  அலுவலர் அனுப்பிவைக்கவேண்டும்.விளம்பரபோஸ்டர்கள் மட்டுமின்றிதயார் செய்துகொண்டுவரப்படும் நோட்டீஸ்களைஅதிகஅளவில் ஜெராக்ஸ் எடுத்துகொடுப்பவர்களுக்கும் இவ்விதிமுறைகளேபொருந்தும். தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லதுஉதவிதேர்தல் நடத்தும்  அலுவலர் ஆகியோர்களிடம் சான்றிதழ்கள் பெற்றபின்னரேவிளம்பரபதாகைகளைவைக்கஅனுமதிக்கப்படும். உரியஅனுமதிபெறாமல் விளம்பரம் அச்சடிக்கும் அச்சகஉரிமையாளர்கள்மீதுவழக்குப்பதிவுசெய்து 6 மாதம் வரைதண்டனைவிதிக்கநேரிடும். தேர்தல் விதிமீறல்களைதடுக்கவே இதுபோன்றநடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவிவரங்கள் எவ்வளவுமுக்கியத்துவம் வாய்ந்தவைஎன்பதைஅனைவரும் தெரிந்துகொண்டுதேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைமாவட்டநிர்வாகம் கடுமையாகநடைமுறைப்படுத்தும். எனவேஅனைவரும் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனமாவட்டஆட்சித்தலைவர்/ மாவட்டதேர்தல் அலுவலர் அவர்கள் பேசினார்.
கூட்டத்தில்,தூத்துக்குடிமாநகராட்சிஆணையர் வீ.ப.ஜெயசீலன், ,மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடிசார் ஆட்சியர் சிம்ரான்ஜீத்சிங்கலோன், ,உதவிஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo