Onetamil News Logo

தூத்துக்குடியில் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் சி.இ.ஓ-சந்திப்பு ;பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்க கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடியில் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் சி.இ.ஓ-சந்திப்பு ;பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்க கோரிக்கை 


 தூத்துக்குடி 2019 ஜூன் 19 ;தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக முதன்மைக் கல்வி அலுவலராக பணியேற்ற  முதன்மைக் கல்வி அலுவலர்  ஞானகவுரி-யை   TNHSPGTA -அமைப்பின் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.                                                                                                                                                         
 முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன்  சிறிய அறிமுகத்திற்க்கு பிறகு,   முதுகலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. அதில் முக்கியமாக 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பாடப்புத்தகங்கள்அனைத்தையும் உடனடியாக வழங்க வேண்டும், குறிப்பாக தமிழ் வழி பாடப் புத்தகங்களை உடனடியாக வழங்க ஆவண   செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளியில் வாகனத்தின் மூலம் கல்வித்துறையே வழங்கிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது பாடப்புத்தகங்கள் வழங்காமல் முழுமையாக வழங்காமல் நடத்தப்படும்  புதிய பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட பயிற்சியானது பயனற்றது. என்றும் அனைத்து பாட புத்தகங்களும் வழங்கிய பிறகு மீண்டும் ஒருமுறை ஒரு நாள் பயிற்சி  முதுகலை ஆசிரியர்களுக்கு நடத்தி பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு தங்களுடைய கோரிக்கையை ஏற்கிறேன் என்றும் முதன்மை கல்வி உடனடியாக கண்டிப்பாக இவ்விஷயத்தை நிறைவேற்றித் தருவேன் என்று உறுதியளித்தார் .  மேலும் தேர்வு முறையில் புதிய முறை புகுத்தப்படும் என்று பரவி வரும்கட்புலன தகவல் சார்ந்து கேட்டதற்கு, முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், மேலே இருந்து எவ்வித தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை .அவ்வாறு வந்தால் உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதுவரை எவ்விதமான அனுமான   பரபரப்பான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.
இதுபோல பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நலன் சார்ந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தயாரித்து  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்,  வினாத்தாள்களுக்கான வருடாந்திர வினாத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும்,  அதில் மாணவர்களுக்காக தயார் செய்து வழங்கப்படும் வினாத்தாள் தரமாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.
இறுதியில் அமைப்பினுடைய மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் மங்களாவதி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  கௌரவித்தார் .  நிர்வாகிகள் அனைவரும்  மாநில அமைப்புச்  செயலாளர்  சற்குணராஜ்  முதன்மைக் கல்வி அலுவலர் -க்கு அறிமுகம் செய்யப்பட்டு அனைவரும் முதன்மை கல்வி அலுவலருக்கு வாழ்த்துகளை தெரிவித்து,முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் வாழ்த்துகளை பெற்றனர். 
இந்த சந்திப்பில் கல்வி மாவட்டத் தலைவர் யூஜின் ,மாவட்ட செயலாளர் மூக்கையா மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் ,மாவட்ட தலைவர்கள் நம்பிராஜன்,சரவணமுத்துகுமார், கல்வி மாவட்ட செயலாளர்கள் ஜெபஸ்டின் செல்வகுமார்,  மாவட்ட செய்தித் தொடர்பாளர் முருகன், ஜெரால்டு மாவட்ட துணை தலைவர் நடராஜன்,சதீஷ்குமார் இரவிக்குமார் ,மகளிரணி செயலாளர் மங்களாவதி ஜெயமர்ஜினா   மற்றும் கல்வி மாவட்டத்தலைவர்கள் , செயலாளர்கள் மாநில ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo