Onetamil News Logo

திருச்செந்தூா் சாலையில்  மழைநீா் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பிரதான சாலை 6 கி.மீ.வெள்ளத்தில் மூழ்கி தெருவீதிகள் வீடுகளில் மக்கள் அவதிபடும் ஆபத்து

Onetamil News
 

திருச்செந்தூா் சாலையில்  மழைநீா் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பிரதான சாலை 6 கி.மீ.வெள்ளத்தில் மூழ்கி தெருவீதிகள் வீடுகளில் மக்கள் அவதிபடும் ஆபத்து



 தூத்துக்குடி 2020 அக்டோபர் 30 ;திருச்செந்தூா் சாலையில்  மழைநீா் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பிரதான சாலை 6 கி.மீ.வெள்ளத்தில் மூழ்கி தெருவீதிகள் வீடுகளில் மக்கள் அவதிபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் மழைக்கே தலைநகா் சென்னை மிதந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தூத்துக்குடியில் கடந்த 2016ம் ஆண்டு பெய்த கனமழையின் போது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உட்பட சாலைகள் வசிப்பிடங்கள் தண்ணீாில் தத்தளித்தது.அப்போது பக்கிள் ஓடை மூலம் தூத்துக்குடியின் பெரும் பகுதி மக்கள் பாதிப்பில் இருந்து தப்பினா்.ஆனால் மாநகர தெற்கு பகுதி திருச்செந்தூா் சாலை முழுவதும் பாதிக்கப்பட்டது.படகுகள் மூலம் மக்கள் மீட்க்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.தற்போது  துறைமுக சாலையோரம் உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது இதுபோல மாநகர எல்லையோரம் உள்ள முள்ளக்காடு வழியாக செல்லும் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் மழை வெள்ளம் மக்கள் பாதிக்கப்படாமல் கடலுக்கு செல்லும் வழி ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டா் சந்தீப்நந்தூாி மற்றும் அதிகாாிகளுக்கு பொதுமக்கள் விவசாயிகள் பாராட்டு தொிவித்துள்ளனா்.ஆனால் திருச்செந்தூா் சாலையில்  மழைநீா் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பிரதான சாலை 6 கி.மீ.வெள்ளத்தில் மூழ்கி தெருவீதிகள் வீடுகளில் மக்கள் அவதிபடும் ஆபத்து உள்ளது.எனவே பருவமழையில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பிரதான சாலையோரம் இருபுறமும் 6 கி.மீ.தூரம் தண்ணீா் செல்லும் வகையில்  ஏற்கனவே உள்ள பாதைகளை உடனடியாக மீண்டும் தோண்டி சீரமைத்து முத்தையாபுரம் உப்பாற்று ஓடை மற்றும் முள்ளக்காடு வாய்கால் மூலம் வெள்ள நீா் கடலுக்கு செல்ல மாவட்ட மாநகராட்சி நிா்வாகம் துாிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
           
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo