Onetamil News Logo

வரும் 15ம் தேதி தூத்துக்குடிக்கு ஸ்டாலின் வருகை ;வடக்கு மாவட்ட தி.மு.க.வினருக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை 

Onetamil News
 

வரும் 15ம் தேதி தூத்துக்குடிக்கு ஸ்டாலின் வருகை ;வடக்கு மாவட்ட தி.மு.க.வினருக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை 


தூத்துக்குடி 2020 பிப்.13: தி.மு.கழக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற 15.02.2020  சனிக்கிழமையன்று தூத்துக்குடி வருகை தருகிறார்.வடக்கு மாவட்ட தி.மு.க.வினருக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு ;மறைந்த அண்ணாச்சி என் பெரியசாமி அவர்களின் பேரனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  பி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ ,ஜீவன் ஜேக்கப்  மகன் டாக்டர். மகிழ்ஜான் சந்தோஸ் சேலம் டாக்டர். ப்ராங்க் கிருபா –  பூர்ணிமா ப்ராங்க் ஆகியோரின் மகள் டாக்டர் கீர்த்தனா ஆகிய இருவருக்கும் கடந்த 12.02.2020 புதன்கிழமை அன்று சேலத்தில் திருமணம் நடைபெற்றது. 
அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நாளை (15.02.20) சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் திருமண மண்டபத்தில் வைத்து தி.மு.கழக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை தி.மு.க. துணை தலைவர்  திருமதி. கனிமொழி கருணாநிதி முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக கழக தலைவர் தளபதியார் 15.02.2020 சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து மதியம் 12.00 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தருகிறார்.
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தரும் அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கிப்படுகிறது.
விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியிலும், அதன்பின் மாலை 5.00 மணிக்கு நடைபெறும் திருமண வரவேற்பு நிகழச்சியிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினாகள்,மாநகர, நகர, ஒன்றிய பகுதி, பேரூர் மற்றும்; ஊராட்சிக் கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்,  அனைவரும்; பெருந்திரளாக கலந்து கொள்ள வருகை தருமாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo