Onetamil News Logo

தூத்துக்குடியில் கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம்,வால்  சண்டை,சுருள் வாள் ,மான் கொம்பு, போட்டிகள் நிறைவு 

Onetamil News
 

தூத்துக்குடியில் கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம்,வால்  சண்டை,சுருள் வாள் ,மான் கொம்பு, போட்டிகள் நிறைவு 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;தூத்துக்குடியில் கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கடந்த 2 நாட்களாக  பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம்,வால்  சண்டை,சுருள் வாள் ,மான் கொம்பு, போட்டிகள் நடந்தது. 
தூத்துக்குடி மச்சாது நகர் செல்வராஜ் ஆஸ்பத்திரி அருகில் இருக்கும்  கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமி  3-1/2 ஏக்கரில் செயல்படும் அகாடமியில் பல்வேறு பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்திலேயே  முதல் முறையாக தனியார் சார்பில் தூத்துக்குடியில் தான் சிறந்த பயிற்சி மையமாக கடந்த 2 ஆண்டுகளாக கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல்பட்டு வருவதாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். 
இந்த நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக  தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள்,பங்கேற்ற  சிலம்பாட்டம்,வால்  சண்டை,சுருள் வாள் ,மான் கொம்பு,ஆகிய போட்டிகள் நிறைவு பெற்றன.விழாவில் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுக போக்குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகரன் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
போட்டியில் 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி சிலுவைப்பட்டி முத்து சிலம்பக்கூடம் முதல் பரிசை தட்டி சென்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி.துறைமுக போக்குவரத்து மேலாளர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்.முன்னதாக அவர் பேசியதாவது...தனி மனித அமைப்பு இது போன்று சென்னையில் கூட விளையாட்டுக்காக பல லட்சம் செலவு செய்து இப்படி விளையாட்டு அகாடமி தொடங்கியதாக தெரியவில்லை,கேம்ஸ் வில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்க இருக்கிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உபகரனங்கள் இருக்கிறது. பள்ளி சிறார்கள் ஆடும் சிலம்பு மிகவும் அருமையாக இருந்தது.இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அவர் பேசினார்.

துபாய் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள ஜார்ஜ் இளங்கோ, முன்னிலை வகித்தார்.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மேலாண்மை இயக்குனர் ரைபின் தார்ச்சியூஸ் மற்றும் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் போன்றோர் செய்திருந்தார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo