Onetamil News Logo

தூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு 

Onetamil News
 

தூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு 


தூத்துக்குடி 2019 நவம்பர் 14 ;தூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் புதிய பேட்டரிகள் உள்ள பகுதியையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களையும் பார்வையிட்டார். எந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.கலந்து கொண்டவர்கள்.ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரே‌‌ஷ் பொன்னையா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo