Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் திருமண வரன் அறிமுக விழா

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் திருமண வரன் அறிமுக விழா



திருச்செந்தூர்,2019 செப்.20 ; தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் திருமண வரன் அறிமுக விழா நடந்தது.
திருச்செந்தூர், வ.உ.சி.தெரு, இந்து துவக்கப்பள்ளியில் வைத்து நடந்த வரன் அறிமுக விழாவுக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.லெட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஏ.பி.கே. பாலன், மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.ராமன், ஜெ.உமாபதி, ச.இசக்கிமுத்து, இந்து துவக்கப்பள்ளி நிருவாகி சு.இராஜமாதங்கன் திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க செயலர் ப.சந்தணராஜ், பொருளாளர் கோ.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் பேரவை தலைவர் ராம்குமார் வரவேற்புரையாற்றினார். நிகழச்சியில் மாவட்ட இணைச்செயலர் ஸ்ரீதரன் வரன்களை பதிவு செய்யும் நிகழ்ச்சியையும், தகவல் தொடர்பாளர் முருகன் ஜாதக நகல்கள் வழங்கி வரன்களை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள், திருச்செந்தூர் வீட்டு வசதி சங்க தலைவர் ச.சுந்தர், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் ச.மா.கார்க்கி, கே.டி.சி. ஞானமூர்த்தி, தொழிலதிபர் கணேஷ், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்ட இளைஞர்பேரவை செயலர் சொக்கலிங்கம், காயல்பட்டணம் சைவ வேளாளர் சங்க தலைவர் கண்ணன், மாவட்ட வ.உ.சி. பேரவை துணைஅமைப்பாளர் பிரபாகரன், திருச்செந்தூர் சைவவேளாளர் சங்க துணை செயலர் முத்துக்குமார் கண்ணன், இளைஞர்பேரவை நிர்வாகிகள் மணிகண்டன் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo