Onetamil News Logo

சக்தி வித்யாலயாவில் சாரண, சாரணிய இயக்க தின விழா

Onetamil News
 

சக்தி வித்யாலயாவில் சாரண, சாரணிய இயக்க தின விழா


தூத்துக்குடி 2019 நவ.10: தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தினவிழா கொண்டாடப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தினவிழா பள்ளியின் நிறுவனர் திரு. சு..சண்முகம்  தலைமையில் நடைபெற்றது. விழாவில் சாரண, சாரணிய இயக்க கொடி ஏற்றப்பட்டு, பாரத சாரண, சாரணிய இயக்க நிறுவனர் பேடன் பவுல் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாரண, சாரணிய பொறுப்பாசிரியர்கள், சாரண சாரணியர்கள் அனைவரும் “நான் கடவுளுக்கும் தாய்நாட்டிற்கும் எனது கடமையைச் செய்யவும், பிறருக்கு எந்த நேரத்திலும் தொண்டுபுரியவும், சாரண விதியைப் பின்பற்றி நடக்கவும் என்னால் இயன்றவரை முயல என் மானத்தின் மேல் வாக்குறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி கூறினர்.
பள்ளியின் நிறுவனர் சு.சண்முகம் தனது உரையில் சாரண கை குலுக்கல் நமது நட்பின் அடையாளமாகவும், இதயம் கனிந்த அன்பு, நம்பிக்கை சகோதரத்துவம் ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது. 1921-ல் இந்தியாவிற்கு பேடன் பவுல் வந்திருந்த போது சிறுவர் சாரணர் சங்கத்தையும், இந்திய சாரணர் சிறுவர் சங்கத்தையும் சாரணர் இயக்க அமைப்பு என்ற பெயரில் இணைத்தார். 1939-ல் பண்டித மதன் மோகன் மாளவியா ,ஹிந்துஸ்தான் சாரணச் சங்கத்தை ஆரம்பித்தார். தேசத்தலைவர்கள் இவ்வியக்கங்களை ஒன்றாக இணைத்து 1950-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7-ம் நாள் பாரத சாரண சங்கம் என்ற பெயரில் செயல்படத் தொடங்கிய நாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் பேடன் பவுலின் வாக்கிற்கிணங்க சிறுவர்களாய் உள்ள பொழுதே உங்களை நீங்கள் நல்ல உடல் நலம் உள்ளவர்களாக, உடல் வலிமை பெற்றவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.  சிறுவர்கள் என்ற நிலை தாண்டி முதிர்ச்சி பெற்றுள்ள நிலைக்கு நீங்கள் வரும்பொழுது மக்களுக்கு நற்பணிபுரிய நிறைந்த ஆர்வமும், ஆற்றலும் உங்களிடம் காணப்படும். உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அனுபவிக்கவும் உங்களுக்கு முடியும். உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு உள்ள வழி பிறருக்கு நாம் மகிழ்ச்சி தேடித் தருவதே ஆகும் என்று வாழ்த்தி பேசினார்.
அதன்பின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சாரண சாரணிய ஆசிரிய, ஆசிரியைகள் பிரித்விராஜ், ராஜ்பரத், ஆ.உதயம்மாள் சத்யா P.முத்துச்செல்வி மணிமேகலை P.சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo