Onetamil News Logo

தூத்துக்குடியில் வாலிபர் குத்திக்கொலை: திமுக பிரமுகர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு

Onetamil News
 

தூத்துக்குடியில் வாலிபர் குத்திக்கொலை: திமுக பிரமுகர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு


தூத்துக்குடி 2020 ஜனவரி 28 ;தூத்துக்குடியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 3பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாப்பிளையூரணி அருகே உள்ள தாளமுத்துநகர், மாதா நகரில் வசிக்கும் ரவி என்கிற பார் ரவி (37). இவர் அந்தப்பகுதியில் திமுக 12வது வார்டு கிளைச் செயலாளராக இருக்கிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள  சந்தன மாரியம்மன் கோயிலில் தர்மகர்த்தாவாக பொறுப்பு  வகிக்கிறார்.  இவர்  டாஸ்மார்க் பார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரது கோயில் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பொருளாளர் பதவி வகித்து வந்த ரத்தினகுமார் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ரத்தினகுமாரின் ஆதரவாளரான செல்வம் (20) என்பவர் பார் ரவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் செல்வம் வீட்டருகே பார் ரவியின் உதவியாளரான பார்த்தசாரதி (20) என்பவரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்தசாரதி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இரவு 1 மணியளவில் செல்வம் அவரது உறவினர் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோர் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர், அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வத்தையும் முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.இதில்  படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர்  தங்க கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக  ரவி என்கிற பார் ரவி, பார்த்தசாரதி அவரது அண்ணன் இசக்கிமுத்து, கதிர் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  பார்த்தசாரதியும், இசக்கி முத்துவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo