Onetamil News Logo

எஸ்.பி.அருண் பாலகோபாலன், தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வாக்காளர்  உறுதி மொழி ஏற்பு   

Onetamil News
 

எஸ்.பி.அருண் பாலகோபாலன், தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வாக்காளர்  உறுதி மொழி ஏற்பு     


தூத்துக்குடி 2020 ஜனவரி 24 ; தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு வாக்காளர்  உறுதி மொழி எடுக்கப்பட்டது. 
அந்த உறுதிமொழியாவது ‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம்” 
என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் கிறிஸ்டி, உமையொருபாகம், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அதிகாரி சுப்பையா, சங்கரன், சிவஞான மூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள்  மயில்குமார், சுடலைமணி, மாரிமுத்து, ராபர்ட், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், அந்தோணியம்மாள், காவேரி, உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo