Onetamil News Logo

பொம்மையாபுரம் கண்மாய் ரூ.43 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு

Onetamil News
 

பொம்மையாபுரம் கண்மாய் ரூ.43 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 14 ;தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய் ரூ.43 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய்; ரூ.43 லட்சம் மதிப்பில் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,இன்று (14.08.2019) நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேலை நடைபெறுவதற்கான பேரேடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.  
ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில்  முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 37 கண்மாய்கள் ரூ.13.15 கோடி மதிப்பிட்டில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்;பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆயக்கட்டு விவசாயிகள் பயண்பெறும் வகையில் கண்மாய்களை சீரமைப்பு செய்தல், மதகுகளை பழுதுபார்தல், மிகை நீர்வழித்தோடிகளை பழுதுபார்த்தல், வரத்துக் கால்வாய், மிகைநீர் வழித்தோடி கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 
ஓட்டப்பிடாரம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட பொம்மையாபுரம் கண்மாய்; முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ், மடை பழுதுபார்த்தல், கரையை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர்வாறுதல், உபரி நீர் கால்வாய் தூர்வாறுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.43 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இப்பணிகள் பொம்மையாபுரம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள மேடு. பள்ளங்களை சமப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளை விரைவாகவும், மழை காலத்திற்கு முன்னதாக முடித்து கண்மாயை நீர் நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் பணிகளை தரமாகவும், ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாகவும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகளின் தரம் குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 522 சிறுகுளங்கள் தூர்வாரவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்தும் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் வரும் மழைக்காலத்திற்குள் முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக வேப்பலோடை பாசன குளம் மற்றும் வரத்து கால்வாய் ஆகியவைகளை ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் அன்னை தெரசா கிராம பொதுநல சங்கத்தின் மூலம் தூர்வாரி புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று துவங்கி வைத்தார். மேலும், வேப்பலோடை அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தின் சுவர் பராமரிப்பு பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து, வெங்கடாசலபுரம் அருகில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வெங்கடாசலபுரம் குடிநீர் குளம் நல்ல முறையில் தூர்வாரப்பட்டுள்ளது. அதைப்போலவே, பாசன குளத்தையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குளம் பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். 
இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிநில கோட்டம் உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி பொறியாளர் பிரியதர்ஷினி, பொம்மையாபுரம் கண்மாய் பாசன குடிமராமத்து விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகப்பாண்டியன், துணைத்தலைவர் முருகன், வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்க தலைவர் முனியசாமி, செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo