குடிசை வீட்டில் மழை நீர் புகுந்து ஏழை மக்கள் படும் அவதி ;தூத்துக்குடி எஸ்.என்.ஆர் நகர் ,வள்ளிநாயகபுரம் மக்கள் உணவுக்கு வழியில்லை
தூத்துக்குடி 2021 ஜனவரி 15;தூத்துக்குடியில் தொடர்ந்து 3-வது நாளாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் முக்கிய சாலைகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. தற்போது மீண்டும் 3 நாட்களாக தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி பிரையண்ட் நகருக்கு அடுத்தது எஸ்.என்.ஆர் நகர் ,வள்ளிநாயகபுரம் என்ற தெருக்கள் இருக்கிறது இதில் ஒரு குடிசை வீட்டில் 5 அடிக்கும் அதிகமான தண்ணீர் நிரம்பி மழைநீர் வெளியே செல்ல முடியாமல் இருந்தது.அந்த ஏழைக்குகுடும்பத்தினர் இன்று பரிதாப சூழ்நிலையில் இருக்கிறார்கள்.. இவர்களுக்கு யாராவது உதவி செய்வார்களா ?....மாநகரில் பல இடங்களில் ரோடுகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.