Onetamil News Logo

அனுமதியில்லாத ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்களைத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும் ஜே.எஸ்.பி., செல்வநாகரத்தினம் அதிரடி 

Onetamil News
 

அனுமதியில்லாத ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்களைத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும் ஜே.எஸ்.பி., செல்வநாகரத்தினம் அதிரடி 


தூத்துக்குடி 2018 மே 16 ; தூத்துக்குடியில் அனுமதியில்லாத ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்களைத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும் ஜே.எஸ்.பி.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகின்ற  22ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக போராட்டக்குழுவினர் என்றகின்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தூத்துக்குடி ஜே.எஸ்.பி., செல்வநாகரத்தினம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.. வருகின்ற  22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடை பெரும் போராட்டம் குறித்து  எவ்வித அனுமதி கேட்டும்,இதுவரை காவல்துறையிடம்  கோரிக்கை மனுவும் வழங்கவில்லை . ஆகையால் , சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டி வன்முறையை தூண்டும் வகையில், சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். 
                                                     
 இந்திய அரசின் அனுமதி பெற்ற ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரத்தை மாவட்ட நிர்வாகம், மத்திய அரசு ,மாநில அரசு மற்றும் நீதிமன்றம் போன்றவை இன்று வரை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 
                                   
எந்த வித அனுமதியில்லாத போராட்டத்திற்கு வணிகர்கள்,  போராட்டக்குழுவினர் என்ற பெயரில் மக்களை அழைத்து  வன்முறையை தூண்டினால் அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தை பயன்படுத்தபடும் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo