Onetamil News Logo

தூத்துக்குடியில் 174 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கார் பறிமுதல்;கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடி 

Onetamil News
 

தூத்துக்குடியில் 174 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கார் பறிமுதல்;கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடி 


தூத்துக்குடி, 2020 மார்ச் 22 ;தூத்துக்குடியில் 174 கிலோ கடல் அட்டைகள் மற்றும் காரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுகின்றன.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் இருந்து கடல் அட்டைகள் உயிருடனும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 ஜுலை 11ம் தேதி தடை விதித்தது.பின்னர், அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவற்றில் 23 கடல் பொருள்களுக்கான தடையை மத்திய அரசு நீக்கியது.கடல் அட்டைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.இதனை அவர்கள் மருந்தாவும், உணவுப் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் கடல் அட்டைகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். “கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு என தனியாக எந்த வலையும் கிடையாது. மீன் வலையில் இவை தானாகவே சிக்கிவிடும். வலையில் ஏறிய மறுகணமே இந்த அட்டைகளும் இறந்துவிடும். அவ்வாறு தவறுதலாக வலையில் சிக்கிக்கொள்ளும் கடல் அட்டைகளை, மீன்களுடன் கரைக்கு கொண்டு வந்தால்கூட மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிப்பதும் நடைமுறையில் உள்ளது.  பத்துக்கும் மேற்பட்ட கடல் அட்டை வகைகள் உள்ளன.   கடல் பகுதியை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைக்க கடல் அட்டையின் பங்கு மிக முக்கியமானது, கடலின் அடியிலுள்ள கழிவுகளை சப்பிட்டு கடலை சுத்தமாக வைப்பவை கடல் அட்டைகள். கடல் அட்டை சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்று மக்கள் நம்புவது மூடநம்பிக்கை. இதுவரை அறிவியல் ரீதியாக இது நிருபிக்கப்படவில்லை   
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அவ்வப்போது கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தூத்துக்குடி–எட்டயபுரம் சாலையில் உள்ள கல்லூரியின் பின்புறத்தில் ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று மதியம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதப்படுத்தப்பட்ட 174 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இந்த நிலையில் தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் பின்புறத்தில் உள்ள தெருவில் ஒரு காரில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, 4 சாக்கு மூட்டைகள் இருந்தன. அதில் சுமார் 174 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார், 174கிலோ கடல் அட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, தூத்துக்குடி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo