Onetamil News Logo

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிசெய்யும் மருத்துவர்கள் 100 க்கு 90 சதவீதம் பேர்  கிளினிக்,மற்றும் ஆஸ்பத்திரி போன்றவற்றை வைத்து வசூல் மன்னனாக  இருப்பதாக வழக்கறிஞர் பெ.சந்தனசேகர்  குற்றச்சாட்டு 

Onetamil News
 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிசெய்யும் மருத்துவர்கள் 100 க்கு 90 சதவீதம் பேர்  கிளினிக்,மற்றும் ஆஸ்பத்திரி போன்றவற்றை வைத்து வசூல் மன்னனாக  இருப்பதாக வழக்கறிஞர் பெ.சந்தனசேகர்  குற்றச்சாட்டு 


தூத்துக்குடி 2020 ஜூலை 15 ;தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிசெய்யும் மருத்துவர்கள்  100 க்கு 90 சதவீதம் பேர்  கிளினிக்,மற்றும் ஆஸ்பத்திரி போன்றவற்றை வைத்து வசூல் மன்னனாக  இருப்பதாக வழக்கறிஞர் பெ.சந்தனசேகர்  குற்றசாட்டுகின்றார். 
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;  கோவிட் 19 காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிசெய்யும் மருத்துவர்கள் கிளினிக்,மற்றும் ஆஸ்பத்திரி போன்றவற்றை வைத்து தொழில் செய்யக்கூடாது என்ற விதிமுறை வழக்கில் உள்ளது.ஆனால் அரசு சம்பளம் கை நிறைய பெற்றுக்கொண்டு அவர்களது கிளினிக்,மற்றும் மருத்துவமனைகள் மூலம் கடுமையான வசூலில் ஈடுபடுவது தவறானதாகும். தூத்துக்குடி மருத்துவர்கள் 4ம் கேட்டில் லெட்சுமி கிளினிக் வைத்து கடுமையான வசூலில் ஈடுபடும் டாக்டர் .மாரிமுத்து,கிளினிக் வைத்து நடத்தும் மருத்துவர்கள் ராஜவேல்முருகன்,இளங்கோ,குமரன் (டூவிபுரத்தில் ஆஸ்பத்திரி வைத்துள்ளார்.),பாவலன் ,சரவணன்,மாதவன்,அருணாச்சலம் ,ராஜேஷ்,பலராமன் கிருஷ்ணன்,உட்பட பெண் மருத்துவர்கள் பலரும் கிளினிக் வைத்து கோவிட் 19 ,காலத்தில் செயல்படுகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடி விசாரணை செய்து அவர்களுக்கு தக்க அபராதம் வழங்கவேண்டும். 
கொரோனா நோயாளிகள் நோய் தொற்றிலிருந்து விடுபட அவர்களுக்கு மன ஆறுதல் வழங்கிட நேர்மறையான தகவல்களை வழங்கிட கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி பொறுப்பு வழங்கவேண்டும்.அவர்கள் ஒளி பெருக்கி மூலம் நேர்மறையான கருத்துக்களை பரப்புதல் செய்ய வேண்டும்.
கொரோனா பயத்தில் இருந்து அவர்களை விடுவிக்க பெண் ஆசிரியர்களுக்கும் பணி பொறுப்பு வழங்கவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறுகிறார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo