Onetamil News Logo

கிரிக்கெட் விளையாட்டால் வீழ்ந்து போன தமிழக விளையாட்டுகள் ;தமிழரை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளை மீட்டெடுப்போம்,

Onetamil News
 

கிரிக்கெட் விளையாட்டால் வீழ்ந்து போன தமிழக விளையாட்டுகள் ;தமிழரை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளை மீட்டெடுப்போம்,


தூத்துக்குடி 2019 ஜூன் 20 ;உலகமெங்கும் கிரிக்கெட் வைரஸ் பரவியதால் தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறத இதனால் இன்று தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கள் காணாமல் போய்விட்டது.
பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு என்று நம்பப்படுகிறது. வாசல்கதவின் முன்னால் ஆடுமேய்ப்பவர் ஒருவர் நிற்க, இன்னொருவர் கல்லை அவரை நோக்கி எறிய குச்சியால் கல்லை அடித்து விளையாடும் விளையாட்டாகத் தான் கிரிக்கெட் ஆரம்பமாகியிருக்கிறது. ஆடுகளை மேய விட்டுக்கொண்டு இடையர்கள் குச்சிகளை வைத்து  விளையாடத் துவங்கிய கிராமிய விளையாட்டான கிரிக்கெட் அதன் பின் பல இடங்களுக்கும் பரவி இன்று உலகெங்கும் பரவிவிட்டது.
உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கடும் போட்டியிருகின்றன.
கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்கிறார் பீட்டர் வின் தாமஸ். இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் தொன்மையை ஓரளவு கணிக்க முடிகிறது. எனினும் பதினேழா 17-ம் நூற்றாண்டுகளில் தான் இது பரவலாக ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.
தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறுச்சோடி கிடைக்கிறது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.
பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள் அமர்ந்து பல்லாங்குழி ஆடுவது வழக்கம். வட்டமாக குழி உள்ள பலகையில் புளியாங்கோட்டை அல்லது சோழி அல்லது முத்துகளை சேர்த்து ஆடுவார்கள். கடைசி மணி தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் விரலுக்கு பயிற்சியும் கணக்கு பயிற்சியும் பெற முடியும் என நம்பினர்.
இன்றைய காலத்தில் சதுரங்க பலகையே நம்மது பலரின் வீட்டில் இல்லாத நிலையல் பல்லாங்குழி பலகை எங்கே இருக்கும்.
விடுமுறை நாட்களில் சிறுவர்கள் தெருவில் பளிங்கு போன்ற கோலிக்குண்டுகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியை கொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.
இது அன்றைய சிறுவர்களுக்கிடைய மிக பிரபலமான விளையாட்டாகும். இதே கோலிக்குண்டுகளை கொண்டு மற்றொரு பலகை விளையாட்டும் உண்டு.
தெருக்களில் மட்டுமல்ல அன்றைய படங்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகமாக இடம்பெறும். பம்பரக்கட்டை மட்டும் சட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை இட வேண்டும், பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட வேண்டும். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும்.
சில சமயங்களில் பம்பரம் உடைந்துவிடும், அதனால் சிறுவர்கள் பம்பரங்களை நேர்த்தியாக தேர்வு செய்வார்கள். சிலருக்கு இது பொக்கிஷம் போன்றது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.
பெண்கள் மத்தியில் பிரபலாமான மற்றொரு பலகை விளையாட்டு இது. இருவராக அல்லது இரு குழுவினர்களாக பிரிந்து இந்த விளையாட்டை ஆடுவர். பெயருக்கு ஏற்றார்போல் புலி ஆட்டை வேட்டையாடுவது தான் விளையாட்டு. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட முயல ஆடுகள் புலியை முடக்க வேண்டும்.
இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டாகும். தமிழகத்தை பிற மாநிலங்களிலும் இந்த விளையாட்டு பிரபலமானதாகும்
இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயம் மற்றும் காய்களை கொண்டு விளையாடும் சதுரங்க பலகை விளையாட்டு. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் எவர் பலகையின் மையத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வருவதே விளையாட்டாகும்.
சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும். பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிக பிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதே ஆபத்தாக அமைகிறது.
இந்த ஒரு விளையாட்டு தான் தற்பொழுதும் சில குழந்தைகள் இன்றைய காலத்திலும் விளையாடும் விளையாட்டாகும். ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்ற குழந்தைகள் வீட்டிற்குள் ஒளிந்துக்கொள்ள வேண்டும். பின்னரே கண்ணை மூடியவர் ஒளிந்திருப்பவரை கண்டுபிடிப்பது தான் விளையாட்டாகும்.
இது ஒரு முதன்மையான விளையாட்டாகும் இந்தியர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் குழந்தைகள் விளையாடும் ஓர் விளையாட்டு.
காலத்தால் மறைந்த கிட்டிப் புள்ளு ,பச்சைக் குதிரை, புளியங் கொட்டை, கள்ளன் போலீஸ், குலை குலையா முந்திரிக்காய் போன்ற பல விளையாட்டுகள் உள்ளது. ஆனால் தற்பொழுதும் தேசிய அளவிலும், சில கிராமங்களில் விளையாடப்படும் கபடி, கோ கோ, உரியடி,கண்ணாமூச்சி, பந்தடித்தல், நொண்டி, கில்லி அடித்தல், பம்பரம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு, பூப்பறித்தல், சொட்டாங்கல், சரியாத் தவறா, சிறுதேர், நீர் விளையாட்டு, இளவட்டக்கல் துாக்குதல், மஞ்சுவிரட்டு, கோலிக்குண்டு அடித்தல், கபடி, ஊஞ்சல்கட்டி ஆடுதல் போன்ற விளையாட்டுகள் அழியாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


   நாமும் நம் வருங்கால சந்ததியனருக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து அழியாமல் பார்த்துக்கொள்வோம். விளையாடி அனுபவிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் படித்து, ஸ்மார்ட் போனில் தெரிந்துக்கொள்ளுவதில் நிச்சயம் கிடைக்காது. ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.
அத்தகைய விளையாட்டுகளில் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன.நாகரிக வளர்ச்சி; அதனால் தான் வீடியோ கேம், அலைபேசியில் மரண விளையாட்டு, கம்ப்யூட்டரில் விளையாட்டு என்று விளையாடிவிட்டு எட்டு வயதிலும், பத்து வயதிலும் தலைவலி, கண்தெரியவில்லை, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற வியாதிகளையும், மரணங்களையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.அன்றைக்கு தெருவில் விளையாடிய குழந்தைகளைப் பார்த்து சந்தோஷப்பட்டனர் பெற்றோர்கள். இன்றைக்கு வீதியில் விளையாட விட்டு எத்தனை பெற்றோர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதனை கவுரவக்குறைச்சலாக நினைக்கிறார்கள். வீடியோகேமிலும், அலைபேசியிலும் விளையாடினால் ரசிக்கிறார்கள்.அதனால் நாம் இன்று நம் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம். தமிழரை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளை மீட்டெடுப்போம்,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo