Onetamil News Logo

வல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா?..பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி? 

Onetamil News
 

வல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா?..பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி? 


சென்னை ஐ 018 ஜூன் 13 ; வல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட  மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா ?..  பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ  சட்டமன்றத்தில் கேள்வி? எழுப்பியுள்ளார்.                                                                                                  
தூத்துக்குடி 4வது பைப்லைன்க்குட்பட்ட பிரத்யேகமாக அதற்கென்று அமைக்கப்பட்ட மின்மாற்றி, வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கென்று அமைக்கப்பட்ட அந்த மின்மாற்றி கடந்த ஒரு மாதகாலமாக பழுதடைந்துள்ளது.  பாளை மின் உபநிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் Low voltage,  சரியாக மின் விநியோகம் இல்லாத காரணத்தால் தூத்துக்குடி மாநகரத்திற்கு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. காலதாமதமும் ஏற்படுகிறது.  ஆகவே,  அமைச்சர் அவர்கள் அவசர முக்கியத்துவம் கருதி உடனடியாக புதிய மின்மாற்றி அமைப்பதற்கு முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 மேலும் வாகைகுளம் பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்த மின்மாற்றியும் ஒரு மாதகாலமாக பழுதடைந்துள்ளது.  வாகைகுளம் பகுதியிலுள்ள மின்மாற்றியை மாற்றி புதிய மின்மாற்றி அமைப்பதற்கு அமைச்சர் அவர்கள் முன்வருவாரா என்பதைத் தங்கள் வாயிலாக  அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன். 
 மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  பி. தங்கமணி பத்தி கூறியதாவது...:  உறுப்பினர் அவர்கள் கூறிய பகுதிகளில், மின்மாற்றிகளை மாற்றித்தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்.  மேலும், அந்தப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை  உடனடியாக மாற்றித் தருமாறும் கேட்டிருக்கிறார்.  அம்மா அவர்களுடைய அரசு,  குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டுமென்பதற்காக back feed  என்று சொல்லக்கூடிய அந்த மின்மாற்றி பழுதடைந்து விட்டாலும் கூட வேறு ஒன்றிலிருந்து Connection கொடுப்பதற்கு வழிவகை செய்திருக்கிறது.   உறுப்பினர் அவர்கள்  மின்பளு குறைவாக இருப்பதால் தடை ஏற்படுகிறது என்றும்  தெரிவித்திருக்கிறார்.        உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட  அந்த 2 மின்மாற்றிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிடப்படும் என்பதை  பேரவைத் தலைவர்  வாயிலாக  உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதில் பேசி உள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo