Onetamil News Logo

விமானம் மற்றும் தொலைதூர ரயில் பயணிகளுக்கு கட்டாய கோவிட் 19 துரித பரிசோதனை (Covid 19 Rapid test) - எம்பவர் அமைப்பு மனு

Onetamil News
 

விமானம் மற்றும் தொலைதூர ரயில் பயணிகளுக்கு கட்டாய கோவிட் 19 துரித பரிசோதனை (Covid 19 Rapid test) - எம்பவர் அமைப்பு மனு



தூத்துக்குடி 2020 மே 23;விமானம் மற்றும் தொலைதூர ரயில் பயணிகளுக்கு கட்டாய கோவிட் 19 துரித பரிசோதனை (Covid 19 Rapid test) - எம்பவர் அமைப்பு மனு அளித்துள்ளனர். 
இது தொடர்பாக தூத்துக்குடி எம்பவர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் ஆ.சங்கர், வெளியுறவுத்துறை, விமானத்துறை, இரயில்வேத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உள்நாட்டு விமான சேவை மற்றும் தொலைதூர ரயில் பயண சேவைகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் செயல்படும் என அறிவிப்புகள் வந்துள்ளன.
கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தற்போது உடல் வெப்பம் பரிசோதித்தல் மற்றும் கட்டாய முகக் கவசம் அணிவது ஆகிய இரு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.  இதை விட எல்லா விமானப் பயணிகளுக்கும் மற்றும் தொலைதூர ரயில் பயணிகளுக்கும் கட்டாய துரித கொரோனா பரிசோதனையான ஊழஎனை 19 சுயினை வநளவ ஐச் செய்தால் பயணங்களில் இந்த நோய்த்தொற்றைப் பெரும்பாலும் தவிர்க்கலாம்.
இந்தப் பரிசோதனையை சுமார் 400 ரூபாய் செலவில் செய்யலாம் மற்றும் சுமார் இருபது நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். அத்துடன் இதற்கான செலவையும் அந்தந்தப் பயணிகளிடமே வசூலிக்கலாம். பணம் செலுத்த இயலாத ஏழை ரயில் பயணிகளுக்கு உரிய கட்டணத்தை பாரதப் பிரதமரின் பேரிடர் நிதியிலிருந்து அளிக்குமாறும் வேண்டுகிறோம்.  இதன் மூலம் பயணம் முடிந்தபின் பயணிகளை 14 நாட்கள் சுய தனிமைப் படுத்துவதையும் தவிர்க்க முடியும்.
ஆகவே மேற்கண்ட எங்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என எம்பவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo