Onetamil News Logo

தூத்துக்குடி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

Onetamil News
 

தூத்துக்குடி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு     


                                                                    

தூத்துக்குடி 2019 ஏப்ரல் 13 ;தூத்துக்குடி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிவகுப்பு நடைபெறுவதை விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தல் பொதுபார்வையாளர் டாக்டர்.கே.மாதவிலதா, முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி,நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடிநாடாளுமன்றபொதுத்தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிவகுப்பு இன்று(13.04.2019) மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் திருமதி. டாக்டர்.கே.மாதவிலதா,முன்னிலையில்,மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர்  .சந்தீப் நந்தூரி,  கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியிலும்;,எட்டயபுரம் சி.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்; நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியினை பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர்  தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதிநாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் தொடர்பான பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவுநாளில்; வாக்குச்சாவடியில் இருப்பார்கள். அதற்குதேவையான இடவசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவுநாளில் வாக்குப்பதிவுதொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாக குறைந்தபட்சம் 50 மாதிரிவாக்குகள் பதிவு செய்ய வேண்டும். பின்னர் மாதிரி வாக்குப்பதிவுகளை தவறாமல் அழிக்கவேண்டும். வாக்குசீட்டுகருவிமற்றும் கட்டுபாட்டுகருவியில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் முழு இயந்திரத்தையும் மாற்றி மாதிரிவாக்குப்பதிவுகளை பதிவுசெய்து அழிக்கவேண்டும். வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் பழுதுகள் ஏற்பட்டால்இயந்திரத்தையும் மாற்றவேண்டும். மேலும்,வாக்குசாவடிஅலுவலர்களின் ஒவ்வொருபணிகளும் மிகவும் முக்கியமானதாகும். தற்போது நடைபெற்றுவரும் பயிற்சியில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் பயிற்றுநர்களால் வழங்கப்படும் அறிவுரைகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் கேட்கும்  சிறுசந்தேகங்களுக்கும் தெளிவானபதில் அளிக்கவேண்டும். ஒருசிறுதவறுகள் கூட நிகழாதவண்ணம் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி சிறப்பாகபணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டதேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர்  அவர்கள் சந்தீப் நந்தூரி, பயிற்சி வகுப்பின் போது நடைபெற்ற தபால் வாக்கு சீட்டு வழங்கும் பணிகளை பார்வையிட்டு,தேர்தல் பணிசான்று பெறாதவர்கள் முழுமையாக பெற்று செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா,.,கோவில்பட்டி கோட்டாட்சியர்; அமுதா,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரன்,வட்டாட்சியர்கள் வதனால் (எட்டயபுரம்),ராஜ்குமார் (விளாத்திகுளம்),லிங்கராஜ் (கயத்தார்),பரமசிவம் (கோவில்பட்டி)மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo