Onetamil News Logo

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 265 மாணவ மாணவிகளுக்கு 53 பெரிய முன்னனி நிறுவனங்களின் நியமன ஆணை வழங்கும் விழா

Onetamil News
 

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 265 மாணவ மாணவிகளுக்கு 53 பெரிய முன்னனி நிறுவனங்களின் நியமன ஆணை வழங்கும் விழா


வாகைக்குளம் 2019 ஏப்ரல் 19 ; மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 265 மாணவ மாணவிகளுக்கு 53 பெரிய முன்னனி நிறுவனங்களின் நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.                                                                                                       தூத்துக்குடி அருகே வாகைக்குளம் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நான்கமாண்டு மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா (JUBLIANT DAY) கல்லூரி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.  இதில் ஸ்காட் கல்விக்குழுமத்தின் தலைவர் முனைவர் கிளீட்டஸ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 265 மாணவ மாணவிகளுக்கு 53 பெரிய முன்னனி நிறுவனங்களின் 353 பணி நியமன ஆணைகளை வழங்கி தலைமையுரை ஆற்றினார். முன்னனி நிறுவனங்களான TCS, Infosys, CRI pump, Robert BOSCH, ZOHO, WIPRO, Accenture, foxconn, Bibox, Atos, KIML, IDBI Federal, Sutherland, Flextronics, Appasamy Associates போன்றவற்றில் வருடத்திற்கு 6 லட்சம் வரை சம்பளமாக பெறும் வாய்ப்பு இம் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்நிகழ்சியில் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.  இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவ மாணவிகளின் தங்களின் பொறியியல் படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தனர்.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் முனைவர் ரவீந்திரன் நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெரால்டு ஜெபக்குமார், துணை முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo