Onetamil News Logo

தூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது 

Onetamil News
 

தூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது 


தூத்துக்குடி 2019 செப் 17 ; தூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 
தூத்துக்குடி,முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்த தங்கமுனியசாமி மகன் தினேஷ் (20) என்பவர் கடந்த 19.10.2018 அன்று தூத்துக்குடி எஸ் எஸ். பிள்ளைத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் மஹாராஜா (19/18) என்பவரை தூத்துக்குடி மீன்பிடித்துறை முகத்தில் கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். 
ஆகவே தினேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அவர்களுக்கு அறிக்கை செய்தார். 
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தினேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். 
அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் மேற்படி எதிரி தினேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo