Onetamil News Logo

தூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

Onetamil News
 

தூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு


தூத்துக்குடி 2020 ஜனவரி 18 ; அவசரமான இந்த உலகில் மக்கள் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தினால் உடலில் பல்வேறு நோய்கள் பாதிக்கப்படுகிறனர் இதனால் உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் வலியுறுத்தி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில்  சைக்கிள் பேரணி நடைபெற்றது இந்த சைக்கிள்  பேரணியை கல்லூரி முன்பு தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானம் வந்து அடைந்தது மாணவர்கள் பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் பெறும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ ரத்தினம் ,கல்லூரி முதல்வர் நாகராஜன்,காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் தேவராஜ்,பொன்னுத்தாய் ,நாகராஜன்,கலையரசி ஆகியோர் பங்கேற்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo