Onetamil News Logo

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை : செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேச்சு   

Onetamil News
 

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை : செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேச்சு       


தூத்துக்குடி  2018 ஆகஸ்ட் 10: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார். அப்பொழுது அவருடன் முன்னாள் அமைச்சர் அதிமுக மாவட்ட செயலாளர்,  சி.த.செல்லபாண்டியன் பங்கேற்றிருந்தார்.  
இது குறித்து தூத்துக்குடியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இன்று முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கர்நாடகா மற்றும்  கேரளா மாநிலகங்களில் பலத்த மழை பெய்ததால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில் 120 அடியைத் நீர்  நிரம்பி வழிந்தோடிகிறது. இதுவரை மேட்டூர் அணையில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடை மடை வரை தண்ணீர் வந்துள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர்.முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளையும் செய்யும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இந்த விசயத்தில் தமிழக அரசு மரபுப்படிதான் நடந்துள்ளது. ஆனால் திமுகவினர் மரபை மீறி செயல்படுகிறார்கள்.பசுமை தீர்ப்பாயம் நிர்வாக அனுமதி வழங்கியிருந்தாலும், உற்பத்திக்கு அனுமதி அளிக்கவில்லை. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் அவர்கள் தலையிட முடியாது.தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வது தாலுகாவாக ஏரல் தலைமையிடமாகக் கொண்டு விரைவில் உதயமாக இருக்கிறது. தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்துவைக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், சுதந்திர தினவிழாவிற்கு பிறகு புதிய தாலுகா அலுவலகம் திறக்க இருக்கிறார்கள் என்றார்.  மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo