Onetamil News Logo

கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும் -- மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும் -- மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 


                                                     

தூத்துக்குடி ,2020 ஏப்ரல் 4 ;தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும் -- மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு ; கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பாக, தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகையாக ரூ.1000/-(ரூபாய் ஆயிரம் மட்டும்) மற்றும் ஏப்ரல் 2020 மாதத்திற்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் குடும்ப அட்டைக்கு உரிய அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றியும் வழங்கிட உத்திரவிட்டு அதன்படி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.  
முதலமைச்சர் அவர்களின் 03.04.2020 நாளிட்ட அறிவிப்பின்படி நிவாரணத் தொகை ரூ.1000/- ம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும்.
அதன்படி ஏற்கனவே 04.04.2020 அன்று நிவாரணம் பெற டோக்கன் பெற்றுள்ளவர்களுக்கு அந்தந்த நியாயவிலைக்கடையில் வைத்து, நிவாரண உதவித்தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படும். இப்பணி முடிக்கப்பட்டவுடன் அன்றைய தினமே 04.04.2020 அன்று நிவாரணம் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரணத் தொகை ரூ.1000/-ம் மற்றும்  அத்தியாவசியப்பொருட்கள் பெற்றுக்கொள்ள டோக்கனும் வழங்கப்படும்.
05.04.2020 ஞாயி;று அன்று நியாயவிலைக்கடைகள் இயங்காது. அன்றைய தினமும் வீடு வீடாகச்சென்று நிவாரண உதவித்தொகை ரு.1000/-ம் மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வாங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வழங்கப்படும்.
06.04.2020 திங்கள் கிழமை அன்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் நியாயவிலைக்கடையில் வழங்கப்படும். விடுபட்ட இனங்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தின்; மூலம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.07.04.2020 அன்றிலிருந்து டோக்கன் வழங்கப்பட்ட இனங்களுக்கு நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே பொருள்களை பெற வர வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo