Onetamil News Logo

ரயில்காலஅட்டவணை தயாரிப்பில் ரயில்வே  அதிகாரிகள் தீவிரம் ;பெங்களுரில் இந்திய ரயில்வே கால அட்டவணை மாநாடு

Onetamil News
 

ரயில்காலஅட்டவணை தயாரிப்பில் ரயில்வே  அதிகாரிகள் தீவிரம் ;பெங்களுரில் இந்திய ரயில்வே கால அட்டவணை மாநாடு


தூத்துக்குடி 2020 ஜனவரி 28 ;ரயில்வேத்துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில்காலஅட்டவணையை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் ரயில்கால அட்டவணையை ரயில்வேத்துறை வெளியிட்டது.  இந்த ஆண்டிற்கான ரயில்காலஅட்டவணையை தயாரிக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த அட்டவணையில் தற்போது இயங்கிகொண்டிருக்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி புதிய நேரத்தில் இயக்குதல், வேகத்தை அதிகரித்தல், முனையங்கள் மாற்றம் இது போன்ற அறிவிப்புகள் இடம்பெறும்.
       ரயில்வே காலஅட்டவணையில் மத்திய மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்து இயக்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும். இதற்காக வேண்டி  ரயில்கால அட்டவணை மாநாடு நடைபெறும். இந்த ரயில்கால அட்டவணை மாநாட்டில் இந்தியாவில் உள்ள 73 ரயில்வே கோட்டங்களில் உள்ள காலஅட்டவணை கட்டுபாட்டாளர் மற்றும்  17 ரயில்வே மண்டலங்களில் உள்ள முதன்மை காலஅட்டவணை கட்டுபாட்டாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள்  ரயில்வே காலஅட்டவணையில் புதிய ரயிலுக்கான அறிவிப்புகள், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் நீட்டிப்பு, ரயில்களின் சேவைகள் அதிகரித்தல், காலஅட்டவணை மாற்றம் செய்தல், புதிய ரயில்கள் நிறுத்தம், வழிதடங்களை மாற்றி இயக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். இந்த ஆண்டு இந்த ரயில்காலஅட்டவணை மாநாடு பெங்களுரில் வைத்து பெப்ரவரி 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்காலஅட்டவணையில் எவ்வாறு எல்லாம் திட்டகருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவிறுத்தியுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வேகமாக செய்து வருகின்றனர். கோட்ட அளவில் இந்த பணிகள் முடியுபெற்று மண்டலத்துக்கு அனைத்து திட்ட கருத்துருக்களும் சென்றுவிட்டன.
இந்த மாநாட்டில் ஓவ்வொரு மண்டலத்தலிருந்து திட்ட கருத்துருவை அடுத்த ரயில்வே மண்டலத்தை சார்ந்த ரயில் கட்டுப்பாடு மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விவாதித்து ரயில் பெட்டிகளின், ரயில் இஞ்சின்களின் இருப்பு, ரயில்கள் இயக்கப்படும் வழித்தடம் மற்றும் காலம், ரயில் பெட்டி பராமரிப்பு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்படும்.      எடுத்துகாட்டாக கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மற்றும் திருவனந்தபுரம் கோட்டம் ஒர் கருத்துரு சமர்ப்பித்தால் நிசாமுதீன் ரயில் நிலையத்தை நிர்வகிக்கும் வடக்கு ரயில்வே மண்டலம் இந்த ரயிலை பராமரிக்கும் வசதி, கால அட்டவணை, நடைமேடை காலியாக இருத்தல், தேவையான ஊழியர்கள் என அனைத்து பார்வையிலும் அலசி ஆராய்ந்து அனுமதி அளித்தால் இந்த ரயில் புதிய ரயில்கள் அறிவிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும்.
குமரிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க கடந்த காலங்களில் நடைபெற்ற  பல்வேறு ரயில்கால அட்டவணை மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நாகர்கோவில் - சென்னை தாம்பரம் ரயிலின் சேவையை அதிகரித்தல், கன்னியாகுமரி – வாரணாசி வாராந்திர ரயில், கன்னியாகுமரி – வாஸ்கோடகாமா வாராந்திர ரயில்,  போன்ற ரயில்கள் இயக்க திட்டம் கருத்துரு வைக்கப்பட்டடு அனுமதிக்கபட்ட சேவைகள் ஆகும்.  இது மட்டுமில்லாமலும் பல வழித்தடங்களில் பல்வேறு ரயில்கள் இயக்க விவாதிக்கப்பட்டு முனைய வசதி இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது.
1. மங்களுர்க்கு இரவு நேர ரயில் வரை இயக்க கோரிக்கை ;
 கன்னியாகுமரியிலிருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களுர் இரவு நேர ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று  குமரி மாவட்ட பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கொச்சுவெலி – வேளாங்கண்ணி தடத்தில் தினசரி ரயில் இயக்க கோரிக்கை (வழி நாகர்கோவில்)
      கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு திருவனந்தபுரம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அதிகபடியான கிறிஸ்தவ மற்றும் பிற மதத்தினரும்  வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க தினசரி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில் , திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைகுடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.
3. கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக  மாற்றி இயக்கம் ;
        தமிழகத்திலிருந்து இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு போதிய ரயில்வசதி இல்லை என்றும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது. கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி,மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக இந்தியாவின் தலைநகரான நியுடில்லிக்கு அதாவது நிசாமுதீன்க்கு 12641ஃ12642 எண் கொண்ட வராத்துக்கு இரண்டு நாள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
4. கன்னியாகுமரி  - புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்கம் ;
        குமரி மாவட்டத்திலிருந்து முதல் முறையாக காரைகுடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மைலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்டுருட்டி போன்ற பகுதிகளை ரயில் மார்க்கம் நேரடியாக இணைக்கு வாராந்திர ரயிலான கன்னியாகுமரி – புதுச்சேரி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
5. நாகர்கோவில் - சென்னை தினசரி ரயில் சேவை: 
         தென்மாவட்ட பயணிகள் தற்போது இயக்கப்படும் ரயில்களில் சென்னை சென்றுவர செல்லமுன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு தற்போது இயங்கிவரும் வாரம் மூன்று முறை ரயிலை தினசரி செல்லதக்கவகையில்  இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சென்னை சென்ட்ரல்க்கு செல்லும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாகவும் மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
6. சென்னை – ஐதராபாத் தினசரி ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு:
          தமிழ்நாட்டின் தென்மாவட்ட பகுதிகளிலிருந்து தெலுங்கானாவின் தலைநகரான  ஐதராபாத்துக்கு செல்ல நேரடி தினசரி இரயில் வசதி இல்லை திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரகணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பபு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் தினசரி சென்று வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமனால்  காலையில் சென்னை சென்று மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு செல்லும் இரயிலில் செல்ல வேண்டும்.  இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது. இதனால் தென் மாவட்ட  பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சென்னையிலிருந்து ஐதாராபாத்துக்கு இயக்கப்படும் மூன்று தினசரி ரயில்களில் ஒரு ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த வழி தடத்தில் ரயில் இயக்கினால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12 மாவட்ட பயணிகள் நேரடியாக பயன்படியாக இருக்கும்.
காலஅட்டவணை மாற்றம்:-     
1. மும்பை - நாகர்கோவில்   ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து கால அட்டவணையை மாற்ற கோரிக்கை
இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையிலிருந்து விளங்குகிறது. தமிழகத்திலிருந்து மும்பைக்கு தினசரி ஆயிரகணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து மும்பையில் தொழில் சம்மந்தமாகவும், வணிக செய்யவும்  லட்சகணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து (சென்னை தவிர) மும்பைக்கு குறைந்த அளவே ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. இதில் மும்பை – நாகர்கோவில் மார்க்கம் இயங்கும் ரயில்கள்; மிகவும் பிரபலமான ரயில்கள் ஆகும்.
மும்பை – நாகர்கோவில் வாரத்துக்கு நான்கு நாள் சேவை ரயில்(16339-16340) மற்றும் மும்பை – நாகர்கோவில் வாரத்துக்கு இரண்டு நாள்  சேவை ரயில் (16351-16352)  என ஆறு நாட்கள் இயங்கும் ரயிலை வேகத்தை அதிகப்படுத்தி சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து ன் கால அட்டவணையை மாற்றி இயக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
2. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றி ரயில்கால அட்டவணையை மாற்ற கோரிக்கை ;
அனந்தபுரி  எக்ஸ்பிரஸ் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகாவை சார்ந்த பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது இல்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள பெருவாரியான பயணிகள் அடுத்த தேர்வாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலையே நம்பி உள்ளனர். இந்த ரயில் மட்டுமே குமரி மாவட்டத்தில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களையும் தங்கள் மாநில தலைநகர் சென்னையுடன் இணைக்கிறது.  இந்த ரயிலை சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலைய நிறுத்தங்களை ரத்து செய்யாமல் சென்னைக்கு தென்மாவட்டத்திலிருந்து செல்லும் முதல் ரயிலாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  
3. நாகர்கோவில் - மங்களுர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ;
நாகர்கோவிலிருந்து பகல்நேரத்தில் கேரளா செல்ல இயக்கப்பட்டுவரும் இந்த ரயில் நாகர்கோவிலிருந்து அதிகாலை 04:05 மணிக்கு புறப்பட்டு விடுகிறது. இவ்வாறு புறபட்டு செல்வதால் காலையில் நாகர்கோவில் நகரத்தில் உள்ள மக்களை தவிர மற்ற ஊர்களில் உள்ள பயணிகள் பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது. தற்போது நாகர்கோவிலிருந்து 7:00 மணிக்கு புறப்பட்டு வந்த மும்பை ரயிலின் காலஅட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்கு முன்பாக நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo