Onetamil News Logo

நம்முடைய பாவ புண்ணியங்களுக்கும் காரணம் மனம் தான். மனதில் தோன்றுவது தான் எண்ணம்

Onetamil News
 

நம்முடைய பாவ புண்ணியங்களுக்கும் காரணம் மனம் தான். மனதில் தோன்றுவது தான் எண்ணம்


                                                                          
 தூத்துக்குடி 2018 ஜூன் 20 ;மனதை அடக்கு, மனதைக் கட்டுப்படுத்து என்றெல்லாம் சொல்லியிருக்கின்றனர். நம்முடைய பாவ புண்ணியங்களுக்கும் காரணம் மனம் தான்.                                                                                                                                                                                                மனதில் தோன்றுவது தான் எண்ணம். மனதில் தோன்றுவதை எப்படி செயல்படுத்தலாம் என்று ஆலோசனை செய்வது புத்தி. புத்தி, எப்படி செயல்படுத்துவது என்று தீர்மானம் செய்கிறது; அதை, அவயவங்கள் நிறைவேற்றுகின்றன. அதாவது, ஒரு காரியம் நடப்பதாக இருந்தால், மனம், புத்தி, அவயவம் இம்மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்.
                                           
ஒருவருக்கு, செடி நட்ட  வேண்டும் என்று தோன்றுகிறது. இது அவரது எண்ணம். இந்த செடியை  எப்படி வளர்ப்பது , எப்படி தினமும் தண்ணீர் ஊற்றுவது   என்று மனம் எண்ணுகிறது. 
 
அவருடைய மனமும் இதில் ஈடுபடுகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். மனம் நல்லதை நினைக்கிறது. புத்தி அதை ஆமோதிக்கிறது. அவயவங்கள் அதை நிறைவேற்றுகின்றன.  
 
 மனம், புத்தி, அவயவங்கள் இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும்; இயங்கினால், நலம் பெறலாம் என்றனர். அதனால், ஒரு நல்ல காரியம் செய்வதற்கும், தவறான காரியம் செய்வதற்கும் முதலில், மனம் தான் காரணம்.தவறான காரியங்களில் ஈடுபடாமலிருக்கும்படி மனதை அடக்கு, என்றனர் நம் முன்னோர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo