Onetamil News Logo

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம்(EVM-VVPAT)  தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்கம் 09.02.2019 முதல் 13.02.2019 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட உள்ளது.  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்தீப் ந

Onetamil News
 

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம்(EVM-VVPAT)  தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்கம் 09.02.2019 முதல் 13.02.2019 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட உள்ளது.  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
சந்தீப் நந்தூரி,தகவல் 


 தூத்துக்குடி 2019 பிப்ரவரி 8 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம்(EVM-VVPAT)  தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்கம் 09.02.2019 முதல் 13.02.2019 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட உள்ளது.  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 
சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM-VVPAT)  தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்கம் 09.02.2019 முதல் 13.02.2019 வரை 5 தினங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட உள்ளது.  வாக்காளர் விழிப்புணர்வு வாகன பணிகள் துவக்க நிகழ்ச்சி நாளை (09.02.2019) தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் காலை 08.00 மணிக்கு நடைபெற உள்ளது.
   
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 6 விழிப்புணர்வு வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விழிப்புணர்வு வாகனம் செல்லும் வாக்குச்சாவடி மையம் மற்றும் செல்லும் பகுதிகள் குறித்து ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பயன அட்டவணை வைக்கப்படும். மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் விழிப்புணர்வு வாகனம் வரும் நாள் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்படும். 
விழிப்புணர்வு பணியானது வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள அரசு கட்டிடங்கள், அரசு பள்ளிகூடங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகிய இடங்களில் நடத்தப்படும்.  வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது மாதிரி வாக்கினை செலுத்தலாம்.  
எனவே வாக்காளர்கள்; அனைவரும் தங்களது மாதிரி வாக்கினை செலுத்தி ஒப்புகைச்சீட்டில்  (VVPAT slip) தாங்கள் செலுத்திய வாக்கு விவரத்தினை ( வரிசை எண், சின்னம், வேட்பாளர் பெயர் ஆகியவற்றை ) தெரிந்து கொள்ளலாம். மாதிரி வாக்கு செலுத்தும் பொதுமக்களிடமிருந்து ஒப்புகை பெறப்படும். எனவே, வாக்காளர்கள்; அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் மேற்படி விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo