Onetamil News Logo

5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி

Onetamil News
 

5000 மேடைகளை கண்ட புதியம்புத்தூர் தபேலா கலைஞரின் மனம்திறந்த பேட்டி


 தூத்துக்குடி  2018 ஆகஸ்ட் 15: கும்... கும்...'என நெஞ்சில் இடியாய்... இனிதாய் எதிரொலிக்கும் தபேலாவை ரசனையாய் இசைக்கும் கலைஞர்களின் உடல் பாவனைகூட ரசிகர்களை உற்சாகமாக தாளமிட வைக்கும். கச்சேரிகள், மேற்கத்திய இசை மேடையில் ஆண்கள் ஆளுமை செய்யும் இந்த இசைக் கருவியை இந்தியாவில் இசைக்கும் முதியோர்களின்  எண்ணிக்கையில் மிகவும்  அரிதிலும் அரிது. அவர்களில் ஒருவர் அந்தோணிமுத்து மகன் பால்ராஜ் (68),இவர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் வசிக்கிறார். இவரது மூதாதையர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தபேலாவில் பால்ராஜ்  விரல்கள் நர்த்தனம் செய்வதை காண, விழிகள் பல வேண்டும். அதிர்வுகள் செவிகளில் தேனாக பாயும். தமிழகத்தின் பல  மாவட்டங்களில் இவரது நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும், தூத்துக்குடி மாவட்டத்தில்  இவரது இசை நிகழ்ச்சிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உள்ளது.இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி உதவியாளர்க பணி செய்துள்ளார்.இவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் மகன் அமல்ராஜ் தபேலா வாசிக்கிறார்.மகள் சாலினி மேடைகளில் பாடி வருகிறார்.
                                                                                                                                                            பால்ராஜ் கிறிஸ்தவ கூட்டங்களில்  உள்ள  மேடைகளிலும் வாசிக்கிறார். இவர் இசையை உயிராக பார்க்கிறார்., இவரது இசைப்பயணத்தில் சிறுவயதில் செப்புக்குடம்,தவளைப்பானை,மண்பானை போன்றவற்றில் தாளம் அடித்து பழகி இருக்கிறார்.அதன்பின்னர்  டேப் ரெகார்டர் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டே அதனுடன் பாடிகொண்டே தாளம் அடித்துப் பழகினேன், கேள்வி ஞானத்திலே பாட்டு கேட்டு கொண்டே தபேலா அடித்துக் கற்றுக்கொண்டேன்.கற்றது கை அளவு ,கல்லாதது உலகளவு நாம் வாசிக்கிறோம் என்றால் அந்த இசையை கேட்டகின்ற மாதிரி இருக்கவேண்டும்.
1970 லிருந்து 40 ஆண்டுகள் தொடர்ந்து  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிகழ்ச்சிகளில் தபேலா வாசித்துள்ளேன்.தபேலா வாசித்தால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.குறிப்பாக உடற்கூறு நன்றாக இருக்கிறது. நரம்புகள் பாலமாகிறது.10 விரல்களும் பலமாகின்றது. 2 1/2 மணிநேரம் அமர்ந்து வாசிக்கின்றபொழுது ஒரு தியானத்தில் இருந்தது போல இருக்கிறது.கிறித்துவமேடைகளில் இவரைத் தெரியாத ஆட்களே இருக்க முடியாது.ஓய்வு பெற்ற பின்னர் தபேலா வாசிப்பை ஒரு முழு நேரத் தொழிலாக வைத்துள்ளார்.  தபேலா இசையை  உலகமுழுவதும்உள்ள மக்கள் மனங்களில் எடுத்து செல்வேன், '' என்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo