Onetamil News Logo

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மண் வள தினம் கொண்டாடப்பட்டது

Onetamil News
 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மண் வள தினம் கொண்டாடப்பட்டது


தூத்துக்குடி2018 டிசம்பர் 6 ;தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மண் வள தினம் கொண்டாடப்பட்டது
சர்வதேச மண் வள தினமானது, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின் படி தூத்துக்;குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வருடத்திற்கான மண்வள தினத்தின் நோக்கமான 'மண் மாசுபாடுவதை தவிர்த்தல்' பற்றிய கருத்தரங்கமானது இக்கல்லூரியின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையினரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இயற்கை வளங்களில் மண் வளம் பெரிதும் இன்றியமையாதது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குத் தேவையான உணவு உற்பத்தி, நீர் ஆதாரம் மற்றும் அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பதால் உலகம் முழுவதும் டிசம்பர் 5-ம் நாள் மண் வள தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் துவக்க விழாவில், முனைவர் பா. பத்மாவதி, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் என்.வி.சுஜாத்குமார் அவர்கள் தனது தலைமை உரையில் மண் வளதினத்தின் முக்கியத்துவம் மற்றும் மீன்வளர்ப்பில் மண் வளத்தின் பங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மீன்வளர்ப்புத் துறையின் தலைவர் முனைவர் சா.ஆதித்தன், பேராசிரியர் மற்றும் தலைவர் தனது கருத்துரையில் மண் வளத்தையும் அதை சார்ந்த தொழில் நுட்பங்களையும் அதன் செயல்முறை விளக்கங்களையும் எடுத்துரைத்தார்.
மேலும் நீர் வளச் சூழலியல் மேலாண்மைத் துறையின் பேராசிரியர்கள், மண் உர மேலாண்மை மற்றும் மண்ணில் கார்பன்:நைட்ரஜன் விகிதம், மீன் வளர்ப்பிற்கு மிதவை உயிரினங்களின் முக்கியத்துவம், மண் மற்றும் நீர் தர மேலாண்மை போன்ற தலைப்புகளில் உரையாற்றினர்.  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்த 20 மீன் பண்ணையாளர்கள்; கலந்துகொண்டு பயனடைந்தனர்.  நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் வே.ராணி  நன்றியுரை வழங்கினார்.  து.மணிமேகலை, உதவிப்பேராசிரியர், இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo