Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் “காணொலிக்காட்சி மூலம் நவம்பர் 26 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ; வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து “காணொலிக்காட்சி” மூலம் பங்கேற்றுப் பயனடையலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர்; ம

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் “காணொலிக்காட்சி மூலம் நவம்பர் 26 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ; வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து “காணொலிக்காட்சி” மூலம் பங்கேற்றுப் பயனடையலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர்; மரு.கி.செந்தில் ராஜ், தகவல் 


தூத்துக்குடி 2020 நவம்பர் 19 ;தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் “காணொலிக்காட்சி மூலம் நவம்பர் 26 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து “காணொலிக்காட்சி” மூலம் பங்கேற்றுப் பயனடையலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர்; 
மரு.கி.செந்தில் ராஜ், தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாவட்ட நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் “காணொலிக்காட்சி மூலம் நவம்பர் 26ம் நாள் காலை 11.00 மணியளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து “காணொலிக்காட்சி” மூலம் பங்கேற்றுப் பயனடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு நவம்பர் 26 அன்று காணொலிக் காட்சி மூலம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். தங்கள் கோரிக்கை மனுக்களை நவம்பர் 26 அல்லது அதற்கு முன்னதாக தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து உரிய பதில் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.
.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo