Onetamil News Logo

மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்

Onetamil News
 

மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்


தூத்துக்குடி 2019 ஜூன் 20; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்
---தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகள் துவக்க நிகழ்ச்சி; நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு கோடை விழாவினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்ட கையேட்டினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  முன்னிலை வகித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1000 ஹெக்டேர் பரப்பு ஒரு தொகுதியாக தேர்வு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மானாவாரி வேளாண்மை மேம்பாடு, நீர் ஆதார மேம்பாடு, மண்வள பாதுகாப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.  மானாவாரி சாகுபடி அதிகம் செய்யப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளது ஆகும். 2016-2017ம் ஆண்டில் 15 தொகுப்புகளிலும், 2018-2019ம் ஆண்டில் 30 தொகுப்புகளிலும் செயல்படுத்தப்பட்டது. 2019-2020ம் ஆண்டில் 32 தொகுப்புகளில் உள்ள 32,000 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் இன்று கோடை உழவு துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்து மழை பெய்தவுடன் விவசாய பணிகளை துவங்கலாம். இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான விதைகள், உரம், மருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு விவசாய பொருட்களை மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள்  குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.  
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம்; ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும், கருங்குளம் ஒன்றியம் பகுதியில் 2,000 ஹெக்டேர் பரப்பிலும், ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும், கயத்தார் ஒன்றியம் பகுதியில் 6000 ஹெக்டேர் பரப்பிலும், கோவில்பட்டி  ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும், புதூர் ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும் என மொத்தம் 6 ஒன்றியங்களில் 32,000 ஹெக்டேர் பரப்பில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண்மை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து அளிக்கும் பயிற்சிகளை விவசாயிகள் கவனமாக பின்பற்றி நல்ல முறையில் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் மகாதேவன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) தமிழ்மலர், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் பூவண்ணன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo