Onetamil News Logo

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தருவைகுளம் ஆழ்கடல் படகு சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, 2 நாள் கனமழை இருப்பதால்; ஆழ்கடல் பகுதியில் உள்ள 46 படகுகளை உடனடியாக இன்று கரை பகுதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.   

Onetamil News
 

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தருவைகுளம் ஆழ்கடல் படகு சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, 2 நாள் கனமழை இருப்பதால்; ஆழ்கடல் பகுதியில் உள்ள 46 படகுகளை உடனடியாக இன்று கரை பகுதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.   


தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தருவைகுளம் ஆழ்கடல் படகு சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, 2 நாள் கனமழை இருப்பதால்; ஆழ்கடல் பகுதியில் உள்ள 46 படகுகளை உடனடியாக இன்று கரை பகுதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தருவைகுளம் ஆழ்கடல் படகு சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், 2 நாள் கனமழை இருப்பதால்; தருவைகுளம் ஆழ்கடல் பகுதியில் உள்ள 46 படகுகளை உடனடியாக இன்று கரை பகுதிக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், செயலி மூலம் 2 நாள் கனமழை இருப்பதாக மேப் பகுதியை மீனவ பிரதிநிதிகளுக்கு காண்பித்து எடுத்துரைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தெரிவித்ததாவது:
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடற் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் கிழக்கு அரபிகடல், கேரளம், மாலத்தீவு, இலட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
அனைத்து கடலோர மீனவ கிராமங்களுக்கும் புயல் தொடர்பான எச்சரிக்கை செய்தி வழங்கபட்டுள்ளது. மீனவர்கள் 29.11.2020-க்கு பின் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திடவும் அறிவுரை வழங்கபட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆழ்கடல் விசைபடகுகளும் உடனே கரை திரும்ப விசைபடகுகளிள் கொடுக்கப்பட்டுள்ள செயற்க்கைகோள் தொலைபேசிகளின் வழியாக அறிவுருத்தபட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டுபாட்டு அறையில் மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் ஆழ்கடல் விசைபடகு மீனவர்களை தொடர்பு கொண்டு கரை திரும்பும் படி அறிவுறுத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையின் எண் : 1077, 0461-2340101 மற்றும் 9486454714 ஆகும் என தெரிவித்தார்.                
நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மீன்வளத்துறை) தீபா, மீன்பிடி துறைமுகம் உதவி இயக்குநர் வயலா மற்றும் தருவைகுளம் ஆழ்கடல் படகு சங்க பிரதிநதிகள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo