Onetamil News Logo

ஆறுமுகநேரியில் கழிப்பறையை காணவில்லை சமூக ஆர்வலர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி சென்னை தலைமைச்செயலகம் முன்பு நூதன போராட்டம் 

Onetamil News
 

ஆறுமுகநேரியில் கழிப்பறையை காணவில்லை சமூக ஆர்வலர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி சென்னை தலைமைச்செயலகம் முன்பு நூதன போராட்டம் 


சென்னை 2020 ஆகஸ்ட் 3 ; ஆறுமுகநேரியில் கழிப்பறையை காணவில்லை என்று சென்னை தலைமைச்செயலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ;தொண்டர் இயக்க மாநில தலைவர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம்,ஆறுமுகநேரி பேரூராட்சி பஜாரில் இருந்த கழிப்பறையை காணவில்லை,அவற்றை மீட்டுத்தரவேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டர் இயக்க மாநில தலைவர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பதாகை ஏந்தி,கழிப்பறை கோப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அதன் பின்னர் அவர் தலைமைச்செயலகம் சென்றார்., 
பின்னர் தொண்டர் இயக்க மாநில தலைவர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது....
  தூத்துக்குடி மாவட்டம்,ஆறுமுகநேரி பேரூராட்சி பள்ளிவாசல் பஜாரில் பொதுக்  கழிப்பறை இருந்தது.தற்போது பஜாரில் இருந்த கழிப்பறையை பல மாதங்களாக காணவில்லை,அவற்றை மீட்டுத்தரவேண்டும், என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.ஆனால் இதுவரை தீர்வு இல்லை,ஆனால் தற்போது அந்த இடத்தில் 37 கடைகள் கொண்ட வணிக வளாகம் ,ஜெய் காம்ப்லக்ஸ் என்று கட்டப்பட்டுள்ளது.ஆறுமுகநேரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2000 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்ட அதிகாரம் இல்லை,ஆனால் இந்த இடத்தில் 37 கடைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த கட்டிடத்தில் தீயணைப்பு  கருவிகள் இல்லை,காற்றோட்டம் இல்லை,வெளிச்சம் இல்லை,பாதுகாப்பு இல்லை,பாதுகாவலர் இல்லை,ஆண் /பெண் -போன்றோருக்கு பொதுக்கழிப்பறை இல்லை ஆகையால்  அவற்றை இடித்து அந்த இடத்தில் மீண்டும் பொதுக் கழிப்பறைகளை கட்டித்தரவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.                   
      இவற்றை கண்டித்து பதாகை ஏந்தி,கழிப்பறை கோப்பையுடன் தலைமைச்செயலகம் சென்று கோரிக்கை மனுவை வழங்கினார். இதில் திருவெற்றியூர் சந்துரு,சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo