Onetamil News Logo

தூத்துக்குடியில் இன்ஜினியர் வீட்டில் 39 சவரன் நகை கொள்ளை ;போலீஸ் விசாரணை

Onetamil News
 

தூத்துக்குடியில் இன்ஜினியர் வீட்டில் 39 சவரன் நகை கொள்ளை ;போலீஸ் விசாரணை


தூத்துக்குடி 2020 மார்ச் 30 :தூத்துக்குடியில் இன்ஜினீயர் வீட்டில் 39 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்பிக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ்டன் அந்தோனி சேவியர் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜேசுசகாய மோனிகா.இவர்கள் குடும்பத்துடன்  கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.சவேரியார் புரத்தில் உள்ள ஜேசுசகாய மோனிகா தாய் வீட்டிற்கு சென்றார். 
 இந்த நிலையில் அவர் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கணவர் வின்ஸ்டனிடம் கொடுத்து ஸ்பிக்நகரில் உள்ள தங்களது வீட்டில் வைக்கும்படி கூறினார். அதன்படி அவர் அங்குள்ள வீட்டிற்கு சென்று ஏற்கனவே வீட்டில் வைத்திருந்த நகைகளுடன் சேர்த்து இந்த நகைகளையும் வைத்தார்.மறுநாள் வீட்டில் நகைகள் இருக்கிறதா என்று பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 39 பவுன் நகைகளை யாரோ மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்னராஜ், நகைகள் எப்படி திருட்டு போனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo