Onetamil News Logo

நீதித்துறையின் வழக்கறிஞரின் நிலை?

Onetamil News
 

நீதித்துறையின் வழக்கறிஞரின் நிலை?    


 தூத்துக்குடி 2019 ஜூன் 17 ;இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நான்கு தூண்களின் ஒன்றான நீதித்துறை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்தியா முழுவதும் சில பிரச்சனைகளை முன்வைத்து வழக்கறிஞர்கள் கடந்த காலங்களில் போராடி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
மக்களுக்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்கள் போராட்டக்களத்திற்கு சென்று நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற அறிவுரையை வழங்கி சில சட்;டத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை மீறுபவர்கள் மீது பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தது மட்டுமன்றி முறையான பட்டப்படிப்பு படிக்கவில்லை என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட இருமாநிலங்களையும் சேர்ந்த சுமார் 2000 பேரை பார் கவுன்சிலில் இருந்து நீக்கம் செய்தனர்.
இதன் பின்னர் தமிழகத்தில் வழக்கறிஞர்களின் போராட்டம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பலர் சட்டம் படித்துவிட்டு நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஏதுவாக காவல் துறை அரசுத்துறை என மற்ற துறைகளில் சென்று வாதாடும்நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில் நீதிமன்றத்தை தெய்வமாக நினைத்து பலர் தங்களது வழக்குகளை எதிர்கொள்ள வருகின்றனர்.
அவர்களை சார்ந்த வழக்கறிஞர்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பெற்றுத்தருவதை செய்யாமல் நிதி கொடுப்பவர்கள் பின்னால் செல்லும் நிலை சமீபகாலமாக உருவாகி உள்ளது. பலர் காவல்துறை மற்றும் சில கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது எங்களைப்போன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு அவமானமாக இருக்கிறது. இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்.
சிலர் நீதிபதிகளின் பெயரை கூட கூறி பலரிடம் உங்களுக்கு சாதகமாக வழக்குகளை முடித்து தருகிறேன் என்று கூறி அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றியும் வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது நாங்கள் அல்ல. தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கமும், தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகமும் தான் அதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.
சமீபகாலமாக சில வழக்குகளை ஒருதரப்பினர் நான் கூறும் நீதிபதி அதை செய்து கொடுப்பார் என்று கூறி ஸ்பிக் நகர், அத்திமரப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மூத்த வழக்கறிஞர்களும் நீதித்துறையை சார்ந்தவர்களும் தவறான வழியில் செல்பரை அடையாளம் கண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo