Onetamil News Logo

இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி.அருண் பாலகோபாலன், முக்கிய அறிவிப்பு  

Onetamil News
 

இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி.அருண் பாலகோபாலன், முக்கிய அறிவிப்பு  


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 21 ; நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை  இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு  ;2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர்,  (ஆண் மற்றும் பெண்) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்), மற்றும் மூன்றாம் பாலினம் எழுத்துதேர்வு விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடியில் 
(1) B.M.C. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி.- 628008, (2) காமராஜர் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி - 628003 (3) காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, (தருவைமைதானம் அருகில்) தூத்துக்குடி-628003, (4) புனித மேரி (St.Marys) ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  மில்லர்புரம், தூத்துக்குடி-628008 (5) சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் அருகில், தூத்துக்குடி -628003 (6) வ.உ.சி (V.O.C)கல்லூரி வளாகம், தூத்துக்குடி - 628008 (7) புனித தாமஸ் (St. Thomas) மேல்நிலைப் பள்ளி, இன்னாஞ்சியார்புரம், தூத்துக்குடி - 628002 மற்றும் (8) புனித மேரி (St.Marys)  மகளிர் கல்லூரி,  கடற்கரை சாலை, (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், தூத்துக்குடி- 628001 (பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) ஆகிய தேர்வு மையங்களில் மொத்தம் 9599 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 
அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். 
இதையடுத்து இணையதளத்திலிருந்து நுழைவுசீட்டு எடுத்த நகலில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர்  புகைப்படத்தை ஒட்டி புகைப்படத்தின் மீது அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வுக்கு வரும் போது கொண்டு வரவேண்டும்.
எழுத்து தேர்வில் கலந்து கொள்ளவரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 09.00 மணிக்கு முன்பு தங்களுக்குரிய தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் கொண்டுவர அனுமதியில்லை. 
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்பொழுது அழைப்புக் கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா, தேர்வு அட்டை மற்றும் ஆள் அறியும்  அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.  மேலும் தேர்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை படித்து பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அறிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo