Onetamil News Logo

துப்புரவு பணியாற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா சீருடைகளை அமைச்சர் வழங்கினார். 

Onetamil News
 

துப்புரவு பணியாற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா சீருடைகளை அமைச்சர் வழங்கினார். 

        

கோவில்பட்டி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா சீருடைகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய சீருடைகள் வழங்கும் விழா கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் 09.01.2019 அன்று நடைபெற்றது. விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு 183 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.3.00.000 மதிப்புள்ள புதிய சீருடைகளை வழங்கினார்கள். மேலும்; துப்புரவு பணியாளர்களுக்கு தையல் கூலி தொகையாக வழங்கினார்கள். மேலும், துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்லாமல் கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டன. 
விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேசியதாவது:-
அம்மா அவர்கள் துப்புரவு பணியாற்றும் பணியாளர்களுக்கு என ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து பணியாளர்களுக்கும் விலையில்லா சீருடை மற்றும் சீருடைக்கான தையல் கூலியாக ஆண் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.800-ம் பெண் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.80-ம் வழங்கப்பட்டு வருகிறது. வேலை பார்க்கும் அனைத்து பணியாளர்களும் அனைத்து மக்களின் நலனுக்கான மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறார்கள், அனைவருக்கும்; பொங்கல் வாழ்த்துக்கள் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் க.அச்சையா,  நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், துப்புரவு அலுவலர் ஸ்டேன்லி குமார், மேலாளர் முத்துச்செல்வம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள்  கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo