Onetamil News Logo

ராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்" என கையை உயர்த்தி உரக்க கோஷம் எழுப்பினார்.

Onetamil News
 

ராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்" என கையை உயர்த்தி உரக்க கோஷம் எழுப்பினார்.


தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;ராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்" என கையை உயர்த்தி உரக்க கோஷம் எழுப்பினார்."- முகிலன் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு! ஏற்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் இதுவரை, 380-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, 15 கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. 16-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் போராளி முகிலன் இன்று ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 
விசாரணைக்குப் பின்னர், போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்படும் போது, "ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்புலத்தில்  ஆர்.எஸ்.எஸ் உள்ளது எனச் சொன்ன ராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்" என கையை உயர்த்தி உரக்க கோஷம் எழுப்பினார். அங்கு திரண்டிருந்த முகிலனின் ஆதரவாளர்களும் அவர் எழுப்பிய கோஷத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முகிலன் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo