Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.


தூத்துக்குடி 2020 ஜூலை 6 ;தூத்துக்குடியில் இன்று காலை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், செந்தில் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ராஜா, மாநில இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர். வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் காமராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo