Onetamil News Logo

30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான நான்கு வகைப் போட்டிகள் 

Onetamil News
 

30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான நான்கு வகைப் போட்டிகள் 


 தூத்துக்குடி 2019 பிப்ரவரி 8 ;தூத்துக்குடியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான நான்கு வகைப்போட்டிகள் நடத்தப்பட்டன். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று (08.02.2019) மாலை 4 மணிக்கு சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடை பெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா,  தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசு வழங்கினார். அவ்வாறு சிறப்புரையாற்றுகையில் அவர் பேசியதாவது, சாலையில் செல்லும்போது எல்லோரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதே போன்று 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் கண்டிப்பாக வாகனங்கள் ஓட்டக்கூடாது. எல்லா மாநிலங்களை விட நம் மாநிலத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நம் மாநிலத்தில் சாலை போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்து வீட்டில் அம்மா, அப்பா வெளியில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்ட வலியுறுத்த வேண்டும். சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால்தான் விபத்துக்களை குறைக்க முடியும் என்று கூறினார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில்  கட்டுரைப்போட்டியில் 38 பள்ளிகளில் 14 மாணவர்களும், 57 மாணவிகளும், பேச்சுப்போட்டியில் 38 பள்ளிகளில் 24 மாணவர்களும், 47 மாணவியர்களும், ஓவியப்போட்டியில் 40 பள்ளிகளில் 41 மாணவர்களும், 35 மாணவிகளும், சாலைப்பாதுகாப்பு வாசகங்கள் எழுதும் போட்டியில் 37 பள்ளிகளில் 19 மாணவர்களும், 50 மாணவிகளும் ஆக மொத்தம் 287 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  பரிசு வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், இயக்கூர்தி ஆய்வாளர்கள் ராஜேஷ், அமர்நாத்  பாத்திமா பர்வின் செய்திருந்தனர். தூத்துக்குடி காவல்துறை துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், முதன்மை கல்வி அலுவலர் முருகேசன்,  சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல், ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வட்டார போக்குவரத்து துறை, கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo