Onetamil News Logo

தூத்துக்குடியில் 2015 வெள்ளத்திற்கு பிறகு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு  ; வெள்ள நீரை அகற்றிட தேவையான பணிகள் செய்யப்பட்டு பக்கிள் ஓடை சீரமைத்ததாக அமைச்சர் பேட்டி 

Onetamil News
 

தூத்துக்குடியில் 2015 வெள்ளத்திற்கு பிறகு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு  ; வெள்ள நீரை அகற்றிட தேவையான பணிகள் செய்யப்பட்டு பக்கிள் ஓடை சீரமைத்ததாக அமைச்சர் பேட்டி 


தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில், கதர்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்   குமார் ஜெயந்த், முன்னிலையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிககை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் தலைமையில் இன்று (2.12.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கதர்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமாக கேட்டறிந்தார். மேலும், ஒவ்வொரு துறை அலுவலர்களும் விரைந்து பணிகளை முடிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். 
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது:- 
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவு 429 மி.மீ. ஆகும். இதுவரை 547 மி.மீட்டர் அளவுக்கு பெய்துள்ளது. இது இயல்புநிலைய விட 30 சதவீதம் அதிகமாகும். வடகிழக்கு பருவமழையினால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 240 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. 118 குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. 50க்கும் குறைவான குளங்களே 25 சதவீதம் நிரம்பியுள்ளது. சராசரியாக 90 சதவீதம் குளங்கள் நிரம்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று சாத்தான்குளம் பகுதியில் 18 செ.மீ மழையளவும், தூத்துக்குடியில் 16 செ.மீ மழையளவும் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சராசரியாக 6 செ.மீ மழை பெய்துள்ளதால் சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் தெருக்கள் மற்றும் வீடுகளில் தேங்கியுள்ளது. இதில் சாத்தான்குளம் பகுதியில மழை நீர் முற்றிலும் வடிந்துள்ளது. திருச்செந்தூர் கால்வாய் ஒடைகள் அனைத்தும் அதிக நீர் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து செல்ல ஜெ.சி.பி மூலம் தற்காலிகள ஒடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 47 இடங்களில் மோட்டார் வைத்து நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாத்தான்குளத்தில் 3 தற்காலிக முகாம்களில் 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ள நீர் வடிந்துள்ளதால் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 1 முகாமில் பொது மக்கள் மதிய உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களில் தங்கள் இல்லங்களில்உள்ளனர். மேலும், கனமழை மேலும் சில தினங்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படின் பொது மக்களுக்கு தேவையான தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். 
பின்னர்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு கதர்துறை முதன்மை செயலாளர்; குமார் ஜெயந்த்,அவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, அவர்களும் கண்காணித்து வருகிறார்கள். பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் விரிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மடை இயப்பு அளவைக் காட்டிலும் சுமார் 30 சதவிதம் அதிகளவில் பெய்துள்ளது.  தமிழக முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் அனைத்து ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாறப்பட்டு வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய்கள் நீர் நிலைகள் 90 சதவிதம் நிரம்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சாத்தான்குளம் பகுதியில் 18 செ.மீ., தூத்துக்குடி பகுதியில் 16 செ.மீ. என அனைத்;து பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளதால் தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஓரிரு இடங்களில் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டிருந்ததாலும், ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை. 54 குடிசைகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆக்கப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்கள். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற 47க்கும் மேற்பட்ட இடங்களில் பம்ப் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் ரயில்வே துறை, ஸ்பிக், துறைமுக மேம்பாட்டு கழகம் மூலம் கூடுதலாக மோட்டார்கள் பெறப்பட்டு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2015 வெள்ளத்திற்கு பிறகு அம்மா  ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு  செய்து வெள்ள நீரை அகற்றிட தேவையான பணிகள் செய்யப்பட்டு மேலும் பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை திட்டத்தின் மீதமுள்ள  பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்  அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். ஓரிரு தினங்களுக்குள் அனைத்து பகுதியிலும் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டு சரி செய்யப்படும் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  தெரிவித்தார்.
தொடர்ந்து  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  மற்றும் முதன்மை செயலாளர் அவர்கள் ஆகியோர், தூத்துக்குடி மாநகராட்சி குறிஞ்சிநகர் மற்றும் செல்வநாயகபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரினை மாநகராட்சி மூலம் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டனர்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), கீதாஜீவன் (தூத்துக்குடி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன்,  மாநகராட்சி ஆணையர் டாக்டர் வி.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.பரிதா செரின், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo