Onetamil News Logo

தூத்துக்குடியில் ஊரடங்கு? கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம்  

Onetamil News
 

தூத்துக்குடியில் ஊரடங்கு? கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம்  


தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருவதால் தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 577 ஆக உயர்ந்து உள்ளது.  இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சென்னை மக்கள் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியைச் சார்ந்தவர்கள்.என்பதனால் சென்னைவாசிகள் சொந்த ஊரில் தஞ்சமடைந்துள்ளனர். கொரோன தொற்று பரவியுள்ளது. சென்னையில் இருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடு எனினும் தூத்துக்குடியில் பழக்கடை வைத்துள்ளவர், மின்சாதன கடை வைத்துள்ளவர் உள்பட கடை வைத்துள்ள சிலருக்கும் கொரோனா தாக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதன் மூலம் பலருக்கும் பரவி இருக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தூத்துக்குடியில் ஊரடங்கு? கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo