Onetamil News Logo

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பா.ஜ.கவினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Onetamil News
 

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பா.ஜ.கவினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்


தூத்துக்குடி 2019 ஜூலை 19 ;கோவில்பட்டியில் லட்சுமி-மில் மேம்பாலம் முதல் ரயில் நிலைய மேம்பாலம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்து நான்குவழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து விரிவாக்கத்துக்கு தேவையான பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.இதில் லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரயில் நிலைய மேம்பாலம் வரை 17 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யப்பட்டது. இதற்கு இடைப்பட்ட இடங்களில் உள்ள 53 மரங்களை அகற்ற குறியீடு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழா கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நடந்தது.அதன் பின்னர் சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தொடர்ந்து லட்சுமி மில் பாலத்தில் இருந்து இருபுறமும் உள்ள மின்கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது. ஆனால், பணிகள் முழுமையாக நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே, சாலை விரிவாக்கம் செய்யும் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யும் மின் கம்பங்களை முழுமையாக அகற்ற வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் நீரோடை, வாறுகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க நகர தலைவர் வேல்ராஜா தலைமையில் அக்கட்சியினர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தீடீரென காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர பொதுச் செயலாளர் தினேஷ் குமார், பாலசுப்பிரமணியன், மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் மாரிச்செல்வம், மாவட்ட obc அணி துணைத் தலைவர் நீதி பாண்டியன், மாவட்ட பிரச்சார பிரிவு துணைத் தலைவர் லட்சுமணன் குமார், மாவட்ட உள்ளாட்சி பிரிவு துணைத் தலைவர் பாலசீனிவாசன், நகர இளைஞரணி  தலைவர் காளிதாசன், நகரச்  பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட IT பிரிவு துணைத் தலைவர் ஜீவானந்தம்,மாவட்ட உள்ளாட்சி பிரிவு செயலாளர் முனிராஜ், நகரச் செயலாளர் சொரணகுமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையெடுத்து உதவி கோட்ட பொறியாளர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, தூத்துக்குடி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், 10 நாட்களுக்குள் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதன் பின்னர் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo