Onetamil News Logo

குஷி குழந்தைகள் நல மைய பெற்றோர்கள்  சார்பில் தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் தனியார்  நிறுவன விரிவாக்கத்திற்கு ஆதரவு கோரிக்கை 

Onetamil News
 

குஷி குழந்தைகள் நல மைய பெற்றோர்கள்  சார்பில் தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் தனியார்  நிறுவன விரிவாக்கத்திற்கு ஆதரவு கோரிக்கை 


 தூத்துக்குடி மார்ச் 12 ; வேதாந்தா குழந்தைகள் நல மையத்தின் வாயிலாக 5 லட்சத்திற்கு மேற்பட்ட  குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.  தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில்  குஷி குழந்தைகள் நல மைய பெற்றோர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவு கோரிக்கை  விடுத்துள்ளனர்.                                                                                                                                                                                                          
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை  மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தூத்துக்குடி குஷி குழந்தைகள் நல மைய பெற்றோர்கள்  சார்பில் மனுவை  கலெக்டர் யிடம்  வழங்கினார்கள் .அந்த  மனுவில் கூறியதாவது... 
குஷி குழந்தைகள் நல மையத்தில் பயன்பெற்றுவரும் குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் அங்கு பணிபுரியும் பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், வேதாந்தா நிறுவனத்தால் “குஷி” என்னும் குழந்தைகள் நல மையம் கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 14,000 வேதாந்தா குழந்தைகள் நல மையத்தின் வாயிலாக 5 லட்சத்திற்கு மேற்பட்ட  குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழந்தைகள் நல மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையங்களில் 3 வயது முதல் 6வயதிற்கு உட்பட்ட  300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த மையங்கள் வாயிலாக 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சமூக பணிகள் தொடர்ந்து நடைபெற மாவட்ட , நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo