Onetamil News Logo

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூலம் 1000 குடும்பங்களுக்கு குடிநீர்

Onetamil News
 

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூலம் 1000 குடும்பங்களுக்கு குடிநீர்



தூத்துக்குடி, 2019 ஜூன் 10:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் 1000 குடும்பங்களுக்கு குடி நீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. தாமிர சுரபி  என்பது  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முத்துச்சரம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு முக்கிய குடிநீர் திட்டமாகும்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தேவை மிக அதிகமாக உள்ள கிராம மக்களிடமிருந்து எண்ணற்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 11 ம் தேதியன்று தொடங்கப்பட்ட இச்செயல்திட்டம், ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரு நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 36 லிட்டர் தண்ணீர், டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.  இதுவரை 1000 குடும்பங்கள் வரை இத்திட்டத்தின் கீழ் பயனடைகின்றன இத்திட்டம் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய  5000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதும் என உயர்த்தப்படும்.  தூத்துக்குடியிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்களையும் படிப்படியாக இத்திட்டத்தின் கீழ் பலன்பெறுமாறு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. 2500 முதல் 6000 லிட்டர் வரை கொள்ளளவு திறன்கொண்ட ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டேங்கர்கள், ஐஎஸ்ஐ குடிமம் பெற்ற குடிநீர் தயாரிப்பு தொழிலகங்களிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீரை சேகரித்து, இரு நாட்களுக்கு ஒருமுறை இந்த 20 கிராமங்களுக்கும் அதனை வழங்கும்.  இதுவரை தூத்துக்குடியிலுள்ள 7 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதன்மூலம் ஏறக்குறைய 1000 குடும்பங்கள் பலன் பெறுகின்றன.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பங்கஜ் குமார்: இக்குடிநீர் வழங்கல் திட்டம் குறித்துப் பேசுகையில்: ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள சமூகங்கள், சுத்தமான, தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீருக்கான அணுகுவசதியைக் கொண்டிருப்பது எங்களது மிகப்பெரிய, முக்கியமான முன்னுரிமைகளுள் ஒன்றாகும்.  தாமிர சுரபி திட்டத்தின் வழியாக தூய்மையற்ற நீரால் பரவுகின்ற நோய்களின் இடரை குறைக்கவும் மற்றும் இச்சமூகத்தினர், தூய்மையான நீரை போதுமான அளவு அருந்தி, ஆரோக்கியத்துடன் வாழ உதவவும் நாங்கள் விரும்புகிறோம். இத்திட்டம்  எமது சமூகங்களுக்கு நீண்டகால சேவையாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக, எமது ஆலை வளாகத்திற்குள் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்று கூறினார். குடிநீர் வழங்கல் திட்டத்திற்கான தொடக்கநிலை செலவானது, ரூ.50 இலட்சமாகும்.  5000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கலை விரிவாக்க திட்டமிடப்பட்டிருப்பதால், இது அதிகரிக்கக்கூடும்.  இச்செயல்திட்டத்தின் ஒட்டுமொத்த செலவையும், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo